ரயில்வே பாலத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரி- போக்குவரத்து பாதிப்பு

 

ரயில்வே பாலத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரி- போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு

மொடக்குறிச்சி அருகே ரயில்வே பாலத்தில் உள்ள இரும்பு தடுப்பில் கண்டெய்னர் லாரி சிக்கிக் கொண்டதால் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே ஆரியன் காட்டுப்புதூர் பகுதியில் ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த பாலத்தில் அதிக உயரம் கொண்ட வாகனங்கள் செல்ல முடியாதவாறு இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

ரயில்வே பாலத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரி- போக்குவரத்து பாதிப்பு

ஆரியன் காட்டுப்புத்தூர் ரயில்வே பாலத்தில் நுழைய முயன்றபோது இரும்பு தடுப்பில் உரசி சிக்கி கொண்டது. ஓட்டுநர் கடுமையாக முயன்றும் வாகனத்தை வெளியே எடுக்க முடியாததால் கண்டெய்னர் லாரி சாலையின் நடுவிலேயே நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் பலாத்தை கடந்து செல்ல முடியாமல் நீண்ட தூரம் காத்திருந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போக்குவரத்தை ஒரு வழிசாலையாக மாற்றி சீரமைத்தனர். தொடர்ந்து, இரும்பு தடுப்பை வெட்டியெடுத்து கண்டெய்னர் லாரியை வெளியே எடுத்தனர். இதனை அடுதது கண்டெய்னர் லாரி புறப்பட்டு சென்றது. இதனால் ஈரோடு- கரூர் சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.