‘வாக்கு எண்ணும் மையம்’ அருகே… நின்ற கண்டெய்னர் லாரி : திமுக பரபரப்பு புகார்!

 

‘வாக்கு எண்ணும் மையம்’ அருகே… நின்ற கண்டெய்னர் லாரி : திமுக பரபரப்பு புகார்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடைபெற்றது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும் சூழலில், அரசியல் கட்சிகள் அதை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. வாக்கு எண்ணும் மையம் அருகே சம்பந்தமில்லாத ஆட்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அவ்வப்போது கண்டெய்னர் லாரிகள் வந்து செல்வதாகவும் திமுக, மநீம ஆகிய கட்சிகள் புகார் அளித்து வருகின்றன.

‘வாக்கு எண்ணும் மையம்’ அருகே… நின்ற கண்டெய்னர் லாரி : திமுக பரபரப்பு புகார்!

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தின் அருகே நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியால் சர்ச்சை எழுந்துள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் இந்த மையத்தில் தான் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்தின் அருகே நேற்று மாலை 3 கண்டெய்னர் லாரிகள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த திமுகவினர், சத்தம் போட்டுக் கொண்டே லாரியை நோக்கி ஓடியுள்ளனர். உடனே லாரி டிரைவர்கள், லாரியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இது தொடர்பாக திமுக பிரமுகர்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.