அதிகரிக்கும் சில்லரை விலை பணவீக்கம்.. ரிசர்வ் வங்கி வட்டியை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை…

அதிகரிக்கும் சில்லரை விலை பணவீக்கம்.. ரிசர்வ் வங்கி வட்டியை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை…

கடந்த செப்டம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.34 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை ஆய்வு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும். அந்த கூட்டத்தில் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் நிர்ணயம் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும். சில்லரை விலை பணவீக்கத்தை கணக்கில் கொண்டே வட்டி விகிதத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி முடிவு செய்யும்.

அதிகரிக்கும் சில்லரை விலை பணவீக்கம்.. ரிசர்வ் வங்கி வட்டியை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை…
இந்திய ரிசர்வ் வங்கி

சில்லரை விலை பணவீக்கம் 4 சதவீதத்துக்குள் வைத்திருக்க இந்திய ரிசர்வ் வங்கியை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் அந்த கட்டுப்பாட்டு அளவை காட்டிலும் 2 சதவீதம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். சில்லரை விலை பணவீக்கம் கட்டுப்பாட்டு அளவை காட்டிலும் அதிகரித்தால் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

அதிகரிக்கும் சில்லரை விலை பணவீக்கம்.. ரிசர்வ் வங்கி வட்டியை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை…
காய்கறி கடை

கடந்த செப்டம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அந்த மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.34 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 6.69 சதவீதமாக இருந்தது. வரும் மாதங்களிலும் சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்தால், இந்திய ரிசர்வ் வங்கி வட்டியை குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.