Home வணிகம் 7 ஆயிரம் டன் வெங்காயம் வந்துட்டு... தீபாவளிக்குள் இன்னும் 25 ஆயிரம் டன் வெங்காயம் வருது.... பியூஸ் கோயல்

7 ஆயிரம் டன் வெங்காயம் வந்துட்டு… தீபாவளிக்குள் இன்னும் 25 ஆயிரம் டன் வெங்காயம் வருது…. பியூஸ் கோயல்

தனியார் வர்த்தகர்கள் 7 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளனர். தீபாவளிக்குள் மேலும் 25 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதியாக உள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

நம் நாட்டில் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. உள்நாட்டில் விலை உயர்வை தடுக்க வெங்காய ஏற்றுமதிக்கு தடை, வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேலும் தனியார் வர்த்தகர்களும் வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:

பியூஸ் கோயல்

தனியார் வர்த்தகர்கள் 7 ஆயிரம் டன்கள் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளனர். தீபாவளி முன்பு மேலும் 25 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதியாக உள்ளதால் உள்நாட் சப்ளை நிலவரத்தில் முன்னேற்றமும், விலையும் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டுறவு நாபாட்டும் இறக்குமதியை தொடங்கும் என்பதால் சந்தையில் போதுமான சப்ளை இருக்கும்.

உருளை கிழங்கு

வெங்காயம் தவிர 10 லட்சம் டன் உருளைகிழங்கும் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக 2021 ஜனவரி வரை உருளை கிழங்கு இறக்குமதி மீதான சுங்க வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் பூடானிலிருந்து சுமார் 30 ஆயிரம் டன் உருளை கிழங்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இறக்குமதி வெங்காயம் மற்றும் உருளைகிழங்கால் உள்நாட்டில் சப்ளை அதிகரிப்பதோடு, விலையும் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தேனி தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி...

சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆம்பூர்...

விஜய் மக்கள் இயக்கத்தின் யூ-டியூப் சேனல் : அதிகாரப்பூர்வ தகவல்!

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விரைவில் யூட்யூப் சேனல் ஒன்று தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் மக்கள்...

முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்!

வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்துள்ளார். வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர்...
Do NOT follow this link or you will be banned from the site!