’ஆகஸ்ட் 3-ல் புதிய கல்விக் கொள்கை பற்றி முதல்வருடன் ஆலோசனை’ அமைச்சர் செங்கோட்டையன்

’ஆகஸ்ட் 3-ல் புதிய கல்விக் கொள்கை பற்றி முதல்வருடன் ஆலோசனை’ அமைச்சர் செங்கோட்டையன்

2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை வரை கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது.

இஸ்ரோ வின்வெளி ஆய்வு நிலையத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழு 2017 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அதன் பணி, புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவது. அதன்படி, 2019, ஜூன் 1-ம் தேதி அக்குழு தனது கல்விக் கொள்கையின் வரைவை சமர்ப்பித்தது.

’ஆகஸ்ட் 3-ல் புதிய கல்விக் கொள்கை பற்றி முதல்வருடன் ஆலோசனை’ அமைச்சர் செங்கோட்டையன்

ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் இத்தேசியக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டு, அதன் மீதான கருத்துக் கேட்பு கூறும் இறுதி தேதியாக ஜூன் 30 –ம் தேதியை குறித்தது. அதாவது மிக நீண்ட கல்வி வரையறையை ஒரே மாதத்தில் படித்துக் கூற வேண்டும். அதுவும் இந்தியா முழுமைக்கான கல்வி வரையறை இரண்டு மொழிகளில் மட்டுமே இருந்தது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு கருத்து தெரிவிக்கும் தேதி ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கல்வியாளர்கள் இதை எதிர்த்து கடுமையாகப் போராடினார்கள். பின்பு கருத்துக் கூறும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. எழுத்தாளர் விழியன், பதிப்பாளர் நாகராஜன் ஆகியோரின் முயற்சியில் பல தன்னார்வலர்களின் ஒத்துழைப்பில் இவ்வரையறையை தமிழில் மொழிபெயர்த்தார்கள்.

’ஆகஸ்ட் 3-ல் புதிய கல்விக் கொள்கை பற்றி முதல்வருடன் ஆலோசனை’ அமைச்சர் செங்கோட்டையன்

மும்மொழிக் கல்வியை வலியுறுத்தியது, ஆரம்ப கல்விக்கான வயதை மூன்றாகக் குறைத்தது, கலை படிப்புகளுக்கு நுழைவு தேர்வு உள்ளிட்ட பல்வேறு முரண்பாடுகளை தமிழக கல்வியாளர்கள் பட்டியலிட்டார்கள். நடிகர் சூர்யா இந்தப் புதிய கல்விக் கொள்கை வரையறை மீதான கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்

இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசு இந்தப் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்புமாகக் கலந்து விமர்சனங்கள் வருகின்றன.

’ஆகஸ்ட் 3-ல் புதிய கல்விக் கொள்கை பற்றி முதல்வருடன் ஆலோசனை’ அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.செங்கோட்டையன், புதிய கல்விக் கொள்கை பற்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆகஸ்ட் 3-ம் தேதி விவாதிக்க இருக்கிறார். இக்கல்விக் கொள்கையின் சாதக, பாதங்கள் குறித்து அப்போது அலசப்ப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.