நயினார் நாகேந்திரனும் பா.ஜ.க-வுக்கு முழுக்கு? – ஆதரவாளர்களுடன் ஆலோசனை

 

நயினார் நாகேந்திரனும் பா.ஜ.க-வுக்கு முழுக்கு? – ஆதரவாளர்களுடன் ஆலோசனை

தமிழக பா.ஜ.க-வில் இருந்து நயினார் நாகேந்திரன் வெளியேறும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழக பா.ஜ.க தலைவராக எச்.ராஜா அல்லது பொன் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தலைவர் பதவியைப் பெற அ.தி.மு.க-வில் இருந்து பா.ஜ.க வந்த நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்களும் முயற்சி செய்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் எல்.முருகன் தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் எச்.ராஜா உள்ளிட்டவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

நயினார் நாகேந்திரனும் பா.ஜ.க-வுக்கு முழுக்கு? – ஆதரவாளர்களுடன் ஆலோசனைதற்போது புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில் பல மூத்த தலைவர்கள் பெயர் இடம் பெறவில்லை. சிலருக்கு முக்கியத்துவம் இல்லாத பதவி கொடுக்கப்பட்டது. இதனால் பலரும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. வேதாரண்யம் தொகுதியில் தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்து பின்னர் பா.ஜ.க பக்கம் சென்ற வேதரத்னம் அதிருப்தி காரணமாக மீண்டும் தி.மு.க-விலேயே ஐக்கியமாகிவிட்டார்.

நயினார் நாகேந்திரனும் பா.ஜ.க-வுக்கு முழுக்கு? – ஆதரவாளர்களுடன் ஆலோசனை
இன்னும் பல தலைவர்கள் பா.ஜ.க-வில் இருந்து வெளியேற ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் முக்கியமானவர் முன்னாள் தமிழக அமைச்சர் நயினார் நாகேந்திரன். தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நயினார் நாகேந்திரனுக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. துணைத் தலைவர் என்பது அதிகாரம் இல்லாத பதவி. கௌரவப் பதவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது.
இதனால் நயினார் நாகேந்திரன் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க-வில் நீடிப்பதா அல்லது அ.தி.மு.க செல்வதா என்று தன்னுடைய ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும், அ.தி.மு.க சென்றுவிடலாம் என்று பலரும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் அ.தி.மு.க-வுக்கு செல்ல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நயினார் நாகேந்திரன் தூதுவிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

நயினார் நாகேந்திரனும் பா.ஜ.க-வுக்கு முழுக்கு? – ஆதரவாளர்களுடன் ஆலோசனை
இவரைப் போல காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க பக்கம் வந்த முன்னாள் எம்.பி கார்வேந்தன், பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜ் உள்ளிட்டவர்களும் பா.ஜ.க-வுக் முழுக்கு போட்டு அ.தி.மு.க பக்கம் சென்றுவிட யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரனை சமாதானம் செய்யும் முயற்சியில் மாநில தலைவர் எல்.முருகன் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரன் வருத்தம் குறித்து தேசிய தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும். தமிழக பா.ஜ.க-வில் முக்கியப் பதவி தருவதாகவும் முருகன் சமரசம் பேசியுள்ளார். ஆனால் நயினார் நாகேந்திரன் பா.ஜ.க-வில் தொடர்வதை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. விரைவில் அவர் அ.தி.மு.க பக்கம் சாயலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.