“பில் பார்த்து பி.பி எகிறியது” – கட்டிட தொழிலாளி கொரானா சிகிச்சைக்கு 1.5 கோடி ரூபாய் பில் போட்ட மருத்துவமனை!

 

“பில் பார்த்து பி.பி எகிறியது” – கட்டிட தொழிலாளி கொரானா சிகிச்சைக்கு 1.5 கோடி ரூபாய் பில் போட்ட மருத்துவமனை!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு இந்தியர் துபாயில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டிட வேலைக்குச் சென்றார். அப்போது அவருக்கு அங்கே சில மாதங்களுக்கு முன்பு கொரானா நோய் வந்தது. இதனால் அவர் இருமல் மற்றும் காய்ச்சலுடன் அங்கிருக்கும் ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார் .அவர் 80 நாள் சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்ததும் அந்த மருத்துவமனை அவரை டிஸ்சார்ஜ் செய்தனர். சந்தோஷமாக டிஸ்சார்ஜ் ஆன அவருக்கு ஒரு பேரிடி காத்திருந்தது. அது என்னவென்றால் அவரின் மருத்துவ சிகிச்சைக்கான பில் தொகை 1.52 கோடி. இந்த பில் தொகையை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.

“பில் பார்த்து பி.பி எகிறியது” – கட்டிட தொழிலாளி கொரானா சிகிச்சைக்கு 1.5 கோடி ரூபாய் பில் போட்ட மருத்துவமனை!
இந்த ஒரு கோடியே 52 லட்சத்தை, சாதாரண கட்டிட தொழிலாளியான தன்னால் கட்ட முடியாது என்று அவர், அங்கு வசிக்கும் இந்திய தொழிலாளர் நல சங்கத் தலைவரிடம் முறையிட்டார். சங்க தலைவர் நரசிம்மா இந்த பில் தொகையினை குறைக்கவும் கட்டவும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தவுடன் தான் ஹாஸ்பிடல் நிர்வாகம் அவரை வெளியேற அனுமதியளித்தது. பிறகு கடந்த புதன்கிழமை அவருக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த வாரம் ஹைதராபாத் வந்தடைந்த அவரை 14 நாட்கள் தனிமையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவரின் மனைவி சாதாரண தொழிலாளி, அவரின் இரு பிள்ளைகள் கல்லூரியில் படிக்கின்றனர்.