ஆகஸ்டு 5ல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடக்கம்!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை எப்போது தொடங்குவது என்று நடந்த ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் வருகிற 5ம் தேதி கட்டுமானப் பணியை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து ராமநவமி அன்று பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டது. இதற்காக மார்ச் மாதம் மிகப்பெரிய யாத்திரை நடத்த யோகி ஆதித்யநாத் திட்டமிட்டிருந்தார். அதற்குள்ளாக கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்படவே கட்டுமானப் பணிகள் தொடங்குவது தடைபட்டது. அதன்பிறகு ஜூன் மாதம் கட்டுமானப் பணி தொடங்க திட்டமிட்ட போது சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. போர் மூளும் ஆபத்து இருந்ததால் கட்டுமானப் பணி தடைப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் கட்டுமானப் பணியை எப்போது தொடங்கலாம் என்று முடிவு செய்ய ஶ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர்.

அந்த கூட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவில் கட்டுமானப் பணியை மீண்டும் தொடங்குவது என்றும், பிரதமர் மோடியை இந்த தொடக்க விழாவுக்கு அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிர்திய கோபால் தாஸ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் கொலையில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை திடீர் மரணம்!

சாத்தான் குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு...

கேஸை திறந்துவிட்டு மகள்களை கொல்ல முயன்ற தந்தை… கதறிய மனைவி பூட்டை உடைத்து காப்பாற்றிய போலீஸ்

புகார் கொடுத்ததால் மனைவி மீதான கோபத்தில் பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸ் பற்ற வைக்க முயன்ற கணவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பிள்ளைகளை உயிரோடு எரிக்க முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை...

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்வரை சோனியா காந்தி இடைக்கால தலைவராக நீடிப்பார்… காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்று இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால் இன்னும் அந்த கட்சிக்கு முழு நேர புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும்...

பொய்யின் குப்பைகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.. பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் குப்பைகள் இல்லாத இந்தியா என்னும் தூய்மை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். சுதந்திர தினம் வரை ஒரு வாரத்துக்கு நாடு முழுவதும் நடைபெறும் குப்பை இல்லாத இந்தியா...