அதிமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை : எல்.முருகன் தகவல்!

அதிமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை : எல்.முருகன் தகவல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கவுள்ளது. அண்மையில் தமிழகம் வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழு, முன்கூட்டியே தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் பீகாரில் நடத்தப்பட்டதை போல 3 கட்டமாக தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியது. அப்போது, அதிமுக தரப்பில் முன்கூட்டியே தேர்தலை நடத்த பரிந்துரைக்கப்பட்டது.

அதிமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை : எல்.முருகன் தகவல்!

இது ஒரு புறமிருக்க, அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கியுள்ளன. ஆளும் கட்சியான அதிமுக, தேசிய கட்சியான பாஜகவுடன் தேர்தல் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. இருந்தாலும், பல விவகாரங்களில் அதிமுக பிரமுகர்களுக்கும் பாஜக பிரமுகர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருவதால், கூட்டணியில் விரிசல் ஏற்படுமா? என்று கூட நினைக்க தோன்றியது. ஆனால் தமிழகம் வந்த பாஜக முக்கிய தலைவர்கள் ஜே.பி.நட்டா மற்றும் அமித்ஷா, மோதலை சமாதானப் படுத்தி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

அதிமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை : எல்.முருகன் தகவல்!

இந்த நிலையில், அதிமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி 27-ஆம் தேதி தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி ரவியுடன் சேர்ந்து தான் பழனிக்கு காவடி எடுத்துச் செல்ல உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.