• July
    23
    Tuesday

Main Area

மக்களவை தேர்தலில் எந்த மோசடியும்  நடக்கல... நியாயமாகதான் நடந்தது- அமெரிக்கா கருத்து

இந்தியாவில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் நடந்துள்ளதாகவும் நாங்கள் நம்புகிறோம் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

17 வது மக்களவை தேர்தலில் பெறும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று மீண்டும் அரியணை ஏறுகிறது. இந்த வெற்றியை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்துறை பிரபலங்களும் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் பலர் வாக்கு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளதாகவும், மோடி அரசு திட்டமிட்டு ஊழல் செய்து மீண்டும் அரியணையில் அமர்ந்ததாகவும் பலர் குற்றஞ்சாட்டினர். 

இந்நிலையில் இந்தியாவில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் நடந்துள்ளதாகவும் நாங்கள் நம்புகிறோம் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட தேர்தலில் எத்தகைய மோசடியும் நடக்கவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ் கூறியுள்ளார். மேலும் இந்தியாவுடன் அமெரிக்க வலுவான நட்புறவினை கொண்டுள்ளது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவாக இந்திய தேர்தல் பார்க்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் அமைதியுடன் தேர்தலை நடத்திக் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது, இந்திய மக்களுக்கு நாங்கள் பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடதக்கது. 

aishwarya Fri, 05/24/2019 - 17:52
Unites States Election Results 2018 lok sabha mODI தொகுதி நிலவரம் உலகம்

English Title

Elections In India Are An Inspiration Around The World: United States

News Order

0

Ticker

1 செந்தில் பாலாஜி மட்டும் ஜெயிக்கட்டும்... அப்புறம் இருக்கு அரவக்குறிச்சியில் கச்சேரி...அதிமுக போடும் அசத்தல் ப்ளான்..!

நடைபெற்று வரும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கடும் டஃப் கொடுக்கும் தொகுதி அரவக்குறிச்சி. செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகமும், பணபலமும் அதிமுகவையும், அமமுகவையும் கலங்கடித்து வருகிறது. இந்நிலையில் அங்கு  செந்தில்பாலாஜி வெற்றி பெற்றால் அது செல்லாது என அறிவிக்கும் நிலையை உருவாக்க அதிமுக இன்றே அசத்தல் திட்டத்தை அரங்கேற்றி இருக்கிறது.

செந்தில் பால்

விஷயம் இதுதான்...  அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. செய்தி பிரிவு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பாபு முருகவேல் ஒரு புகார் மனு அளித்தார். அதில்,  ‘’அரவக்குறிச்சி தொகுதியில் தொட்டிக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதிகளில் வாக்காளர்களை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஓட்டுப்போட விடாமல் தடுத்துள்ளார். இது நீதிக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. அப்பட்டமான தேர்தல் விதிமீறல்.

 செந்தில் பாலாஜி

எனவே செந்தில்பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓட்டுப்போடவிடாமல் தடுக்கப்பட்ட வாக்காளர்களை மீட்டு அவர்கள் வாக்களிக்க செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்காக வாக்காளர்களுக்கு பிரியாணி தயார் செய்து வினியோகிக்க உள்ளனர். இதற்காக அதிக அளவில் இறைச்சி மற்றும் காய்கறிகள் வாங்கி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் வைத்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 50 ஆயிரம் பொட்டலங்கள் வினியோகிக்க உள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகள் உடனடியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார். செந்தில் பாலாஜி

ஒருவேளை செந்தில்பாலாஜி அவரக்குறிச்சியில் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள இந்த புகாரை வைத்து, வேட்பாளர் மீதே தவறு இருப்பதால் அந்தத் தொகுதியில் செந்தில் பாலாஜியின் வெற்றி செல்லாது எனக் கூறி மீண்டும் மறு தேர்தல் நடத்த அதிமுக வலியுறுத்தும். தேர்தல் ஆணையமும் ஒத்துழைத்தால் மீண்டும் அவரக்குறிச்சியில் தேர்தல் நடத்த சில மாதங்கள் பிடிக்கலாம். இதனை மனதில் வைத்தே அதிமுக முன்னெச்சரிக்கையாக செந்தில் பாலாஜி மீது இன்றே புகார் கொடுத்து துண்டை விரித்துள்ளதாகக் கூறுகிறார்கள் அரசியல் அறிந்தவர்கள். 

Thijai Sun, 05/19/2019 - 14:14
aravakurichi senthil balaji செந்தில் பாலாஜி கருத்து கணிப்பு தொகுதி நிலவரம் அரசியல்

English Title

admk trouple to senthil balaji

News Order

0

Ticker

1 வாக்குப்பதிவு எந்திரத்தை தூக்கி போட்டு உடைத்த வேட்பாளர்: ஆந்திராவில் பரபரப்பு !

ஆந்திரா: ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த ஜனசேனா வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.

தொடங்கிய வாக்குப்பதிவு
vote


மக்களவை தேர்தல் இன்று முதல் அடுத்த மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக அருணாசலபிரதேசம், ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. 

ஆந்திராவில் ஒரே கட்டமாக இன்று தேர்தல்
andhra

ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ், தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 319 பேர் போட்டியிட்டுள்ளனர். இங்கு  3 கோடியே 93 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த வேட்பாளர்
 

இந்நிலையில்  ஜனசேனா கட்சி சார்பில்  குண்டக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் மதுசூதன் குப்தா என்பவர் போட்டியிடுகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்தார். அப்போது வாக்காளர்களின் பெயர்கள் சரியாக அச்சடிக்கப்படவில்லை என்று கூறி  அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதத்தில் அவர்  மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வேட்பாளரின் இந்த செய்கையால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.  இதையடுத்து போலீசார் ஜனசேனா கட்சி வேட்பாளரைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: வறுமையை பயன்படுத்தி சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

manikkodimohan Thu, 04/11/2019 - 10:26
Jana Sena Madhusudhan Gupta Jana Sena Candidate andhra pradesh உடைக்கப்பட்ட எந்திரம் தேர்தல் களம் தேர்தல் செய்திகள் தொகுதி நிலவரம்

English Title

Andhra Candidate Smashes EVM At Polling Stating, Arrested

News Order

1

Ticker

0 வி.ஐ.பி தொகுதி - 6 : சிதம்பரத்தில் சிறுத்தைக்கு சிக்கல்! கை கொடுக்குமா கூட்டணி கணக்கு !?

சிதம்பரம் :

சிதம்பரம் தனித்தொகுதி ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது.காங்கிரஸ் இந்தத் தொகுதியில் ஆறு முறை வென்றிருக்கிறது.அதில் வள்ளல் பெருமான் மட்டுமே மூன்று முறை வென்றிருக்கிறார்.அதன் பிறகு சிதம்பரம் தி.மு.க-வின் கைகளுக்கு மாற தி.மு.க-வும் 4 முறை இந்தத் தொகுயை கைப்பற்றியிருக்கிறது.

அடுத்தபடியாக பா.ம.க இங்கே மூன்று முறை வென்றிருக்கிறது.கடந்த முறை மட்டுமே அ.தி.மு.க-வின் சந்திரகாசு முதன் முறையாக வென்றார்.இப்போது அ.தி.மு.க சார்பில் அரியலூர் பொய்யாதநல்லூர் அண்ணா நகரைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் பெ.சந்திரசேகர் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.எம்.ஏ பட்டதாரியான சந்திரசேகர் சென்னை கோயம்பேடு மார்கெட் வியாபாரி.

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் இப்போது ஐந்தாவது முறையாக சிதம்பரம் தொகுதியில் நிற்கிறார்.இதுவரை ஒரு முறை மட்டுமே சிதம்பரத்தில் வென்றிருக்கும் திருமாவளவன், இந்த முறையும் கடும் போட்டியை சந்திக்கிறார். மூன்று மாவட்டங்களில் பரந்திருக்கும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில், குன்னம்,அரியலூர்,ஜெயங்கொண்டம்,புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி இருக்கின்றன.

இதில் காட்டு மன்னார் கோவில் தனித்தொகுதி என்பது குறிப்பிடதகுந்தது. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க ,வி.சி.க இரண்டுமே இங்கு பலமான கட்சிகள் அல்ல! காங்கிரஸ், தி.மு.க,பா.ம.க காட்சிகள் மட்டுமே இங்கு பலமான வாக்கு வங்கி வைத்திருப்பவை.

கடந்த தேர்தலில் பா.ம.க இங்கு தனித்து நின்றே இரண்டு லட்சத்துக்கு மேல் ஓட்டு வாங்கி இருந்தது. அந்த பலத்துடன் இறங்கி இருந்தாலும் சந்திரசேகர் புதியவர். மாறாகத் திருமாவளவன் நன்கு அறிமுகமானவர். சிறந்த பேச்சாளர். ஆனால், இவருக்கு உடன் பிறப்புகளும் காங்கிரஸ் தொண்டர்களும் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருவார்கள் என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும். 

சிதம்பரம் தொகுதி
பெ.சந்திரசேகர்

போதாதற்கு தேர்தல் கமிஷன் வேறு வி.சி.க கேட்ட சின்னங்களை எல்லாம் மறுத்துவிட்டு பானை சின்னத்தை கொடுத்திருக்கிறது. இதை வாக்காளர்களிடம் கொண்டு சேர்ப்பதும் முக்கிய பிரச்சினையாக இருக்கும். காடுவெட்டி குருவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி இது. அவரது மறைவும் இந்தத் தேர்தலின் முடிவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். 

பா.ம.க தலைவர் மீதும், சின்னையா மீதும் கோபத்தில் இருக்கும் காடு வெட்டி குருவின் குடும்பமும் அவரது சொந்த பந்தங்களும் கணிசமான ஓட்டை பிரிப்பார்கள்.அது தொல். திருமாவளவனுக்கு சாதகமாக அமையும்! இதையெல்லாம் தாண்டி,சிறுத்தைகளின் கடும் உழைப்பாலும், தி.மு.க-கூட்டணி கட்சி ஆட்களின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம், இல்லாவிட்டால் சிறுத்தைக்கு சிதம்பரத்தில் சிக்கல்தான் என்பதே இன்றைய நிலை!

newsdesk Thu, 03/21/2019 - 12:07
lok sabha election 2019 Chidambaram constituency thol.thirumavalavan விடுதலை சிறுத்தைகள் சிறப்பு கட்டுரை தேர்தல் செய்திகள் தொகுதி நிலவரம்

English Title

lok sabha election 2019 Chidambaram constituency

News Order

0

Ticker

0 லேடியா மோடியா என்கிற பிரச்சாரத்தில் அம்மா பிரதமர் ஆவார் என்கிற ஆர்வத்தில் மக்கள் போட்ட ஓட்டு அது! நீலகிரி தொகுதி நிலவரம் !
வி.ஐ.பி தொகுதி - 5

நீலகிரி தொகுதி, காங்கிரஸ் அதிகமுறை வென்ற தொகுதி இது. பிரபு மட்டுமே நான்கு முறை வென்றிருக்கிறார். மாஸ்ட்டர் மதன் என்கிற பி.ஜே.பி-க்காரர் இரண்டு முறை இங்கிருந்து (1998,99)தேர்ந்தெடுக்கபட்டு இருக்கிறார் என்பது நீலகிரி தொகுதியின் தனிப்பெருமைகளில் ஒன்று.

nilgiri

நேரடியாக மோதும் திமுக-அதிமுக:

பவானி சாகர், ஊட்டி, குன்னூர், கூடலூர், அவினாசி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிகள் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் அடக்கம். இந்த பொதுத்தேர்தலில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் நேருக்கு நேராக மோதும் தொகுதிகளில் ஒன்று நீலகிரி.

raja

தி.மு.க-வின் ஆண்டிமுத்து ராசா என்கிற அ.ராசா  கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் பணியை துவங்கிவிட்ட நிலையில், அ.தி.மு.க இப்போதுதான் தனது வேட்பாளரை அறிவித்து இருக்கிறது. அங்கே தான் குழப்பமே. நீலகிரி தொகுதியில் வாய்ப்புக்கேட்டு 23 அ.தி.மு.க-காரர்கள் விருப்பமனு தாக்கல் செய்து இருந்தார்கள்.

அறிமுகமில்லாத வேட்பாளர்:

அதில் முக்கியமான ஆட்களாக, முன்னாள் குன்னூர் நகரட்சி தலைவர் சரவணகுமார். பா.ஜ.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்த குருமூர்த்தி, இப்போதைய சிட்டிங் எம்.பி கோபால கிருஷ்ணன், ஜெகதளா ஊராட்சி தலைவர் உஷா ஆகியோரைச் சொல்லலாம். ஆனால் இவர்கள் யாருக்குமே வாய்ப்புதராமல் நீலகிரிக்கு அறிமுகமே இல்லாத அவினாசியைச் சேர்ந்த தியாகராஜனை நிறுத்தி இருக்கிறது அ.தி.மு.க.

thiyagarajan

கடந்த முறை அ.ராசா ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருந்ததால் இந்த முறை எளிதாக நீலகிரியை வென்றுவிடலாம் என்று உற்சாகமாக இருந்த அ.தி.மு.க-வினருக்கு தியாகராஜனை வேட்பாளர் ஆக்கியது பிடிக்கவில்லை. இவர் பொள்ளாச்சி தொகுதிக்காரர்.

மோடியா, லேடியா:

இந்தத்தொகுதியை பொறுத்தவரை,திமுகவின் அ.ராசா பிரபலமானவர்.அவருக்கு இணையான ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும். கடந்த முறை மோடியா இந்த லேடியா என்று ஜெயலலிதா பேசினார்,இப்போது அவர் இல்லை. ஆனால் ராஜாவுக்கு இனையான வேட்பாளர் வேண்டும்.கடந்த முறை கோபால கிருஷ்ணன் வென்றார் என்றால் அது லேடியா மோடியா என்கிற பிரச்சாரத்தில் அம்மா பிரதமர் ஆவார் என்கிற ஆர்வத்துல் மக்கள் போட்ட ஓட்டு அது.

அதிமுக தொண்டர்கள் அதிருப்தி:

eps ops

இந்த முறை கட்சி உடைந்து கிடக்கிறது. இந்த சமயத்தில் தொகுதிக்கு அறிமுகமில்லாத ஒருவரை வேட்பாளர் ஆக்குவதா என்று அடிமட்ட அ.தி.மு.க தொண்டர்கள் குமுறிக்கொண்டு இருக்க, தி.மு.க அமைதியாக...ஆனால் தெளிவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

smprabu Wed, 03/20/2019 - 16:41
nilgiri constituency nilgiri aiadmk dmk Loksabha Elections கோப்புப்படம் தேர்தல் களம் தொகுதி நிலவரம் தமிழகம்

English Title

Loksabha Election 2019: Nilgiri Constituency

News Order

0

Ticker

0 மாபெரும் தலைகள் நின்ற,வென்ற மதுரை மக்களவை! அ.தி.மு.க-வின் கடைசி அஸ்திரம்! தி.மு.க ரியாக்சன்!?

வி.ஐ.பி தொகுதி - 2-மதுரை

மதுரையில் ஆரம்பமே களைகட்டிவிட்டது. தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.எம் பார்ட்டி, சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுதாளர் சு.வெங்கடேசனை வேட்பாளராக நிறுத்தி அமைதியாக தேர்தல் பணியை துவக்கி விட்டது.

அவர்களுக்கு அங்கே பெரிய பிரட்சினை ஏதுமில்லை. வழக்கமான கம்யூனிஸ்ட் ஓட்டும் தி.மு.க ஓட்டும் விழுந்தாலே சு.வெங்கடேசன் வெற்றியைத் தடுக்க முடியாது. அழகிரி தன் வலிமையைக் காட்ட ஏதாவது உள்ளடி வேலைகளில் இறங்கினால் மட்டும் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஸ்டாலினோடு அவருக்கு இருக்கும் முரண்பாடுகள் ஒரு பக்கம் இருந்தாலும் சு.வெங்கடேசன் கள பணிகள் பற்றி தெரியும் என்பதால் முட்டுக்கட்டை போடாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது!

எதிர்த்து நிற்கும் அ.தி.மு.க-விலோ உட்கட்சி பூசல் உச்சத்தில் இருக்கிறது. மேலூர்,மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு ஆகிய 5 தொகுதிகள் அடங்கியது மதுரை பாராளுமன்ற தொகுதி.

முக அழகிரி

பி.கக்கன், கே.டி.கே தங்கமணி, பி.ராமமூர்த்தி, சுப்பிரமணிய சாமி, பி.மோகன், மு.க அழகிரி என்று பல பெருந்தலைகள் நின்ற, வென்ற தொகுதி இது. கக்கன் தொடங்கி மோகன்வரை காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் மட்டுமே மாறி மாறி வென்ற தொகுதி இது. 98 ல் சுப்பிரமணிய சாமியும், 2009ல் அழகிரியும் மட்டுமே விதி விலக்கு. மதுரை பாராளுமன்ற தொகுதியை அ.தி.மு.க வென்றதே கடந்த பாராளுமன்ற தேர்தலில்தான்.

raj sathyan

முதல் முறையாக மதுரையை வென்ற கோபாலகிருஷ்ணனுக்கு இந்த முறை சீட் இல்லை. அவருக்குப் பதிலாக முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனை நிறுத்துகிறார்கள். அ.தி.மு.க-வின் ஐ.டி விங்கை நிர்வகித்துவந்த ராஜ் சத்யனுக்கு மதுரையை வாங்கிக் கொடுத்திருப்பது அமைச்சர் செல்லூர் ராஜு.

இது முதல் நாளிலேயே விரிசலை ஏற்படுத்திவிட்டது. மதுரை அ.தி.மு.க-வில்.கடந்த முறை வென்றவரும் தனது ஆதரவாளருமான கோபாலகிருஷ்ணனை நிறுத்த வேண்டும் என்று போராடிய அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு தோல்வியை ஜீரனிக்க முடியவில்லை.

udhayakumar

மதுரை மாவட்டதை மூன்றாக பிரித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை உதயகுமாருக்கு கொடுத்து இப்போதைக்கு சமாளித்து இருக்கிறார்கள். அதிலும் மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட எந்த சட்ட மன்ற தொகுதியும் உதயகுமாரின் கீழ் வராமல் கவனமாகப் பிரித்திருக்கிறார்கள். இது ஆர்.பி உதயகுமாரை மேலும் வெறுப்பேற்றி இருக்கிறது!

venkatesan

இப்போதைக்கு ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு அணி, அமைச்சர் உதயகுமாரின் அணி என்று இரண்டாக நிற்கிறது மதுரை அ.தி.மு.க.ராஜ் சத்யன் மேயர் மகன் என்பதைத்தவிர மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர். சு.வெங்கடேசன் இருபத்தைந்து வருடங்களாக களத்தில் இருப்பவர். ஜாதி ஓட்டுகள் என்று பார்த்தாலும் ராஜ் சத்யன் முக்குலதோர் பிரிவைச் சேர்ந்தவர். சு.வெங்கடேசன் நாயுடு, அவர் மனைவி செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்.

stalin, alagiri

இந்த இரு பிரிவுகள்தான் மதுரையில் பெரும்பான்மையான வாக்காளர்களின் ஜாதியாக இருப்பதால் இப்போதே ராஜ் சத்யன் வெல்ல வாய்ப்பே இல்லை என்கிறார்கள் மதுரையின் உள்வயனம் அறிந்தவர்கள். ஆனால், வெங்கடேசனிடம் இல்லாத ஒரு வலிமையான ஆயுதம் ராஜ் சத்யனிடம் இருக்கிறது. கடைசி நேரத்தில் செல்லூர் ராஜுவும் ராஜன் செல்லப்பாவும் டன் கணக்கில் பணத்தை இறக்குவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அதை தி.மு.க கூட்டணியும் சு.வெங்கடேசனும் எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

newsdesk Tue, 03/19/2019 - 12:22
Loksabha Elections 2019 Madurai aiadmk dmk parliment elections 2019 கோப்புப்படம் தேர்தல் களம் தொகுதி நிலவரம் தமிழகம்

English Title

LokSabha Elections 2019 - madurai

News Order

0

Ticker

0 வி.ஐ.பி தொகுதிகள்-1 சிதம்பரம், கண்ணப்பன், செந்தில்நாதன் ஆகியோருக்கு அவர்களது ஜாதி ஓட்டுகள் பலம்! ஆனால் ஹெச்.ராஜாவின் கதை வேறு!?

சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார் என்று இன்னும் எந்தக்கட்சியும் இன்னும் அறிவிக்கவில்லை.ஆனால் யார் வேட்பாளர் என்று யூகங்களும் வதந்திகளும் தினம் ஒன்றாய் கிளம்பிக்கொண்டே இருக்கின்றன சிவகங்கை முழுவதும்..

சிவகங்கை தொகுதி

அது சிவகங்கையின் ராசி! ப.சிதம்பரம் தோத்துட்டாரு,ராஜ.கண்ணப்பன்               ஜெயிச்சுட்டாரு... ஆனால்  டெல்லில இருந்து கூப்பிட்டு மிரட்டி ரீ கவுண்டிங் வச்சுதான் சிதம்பரம் ஜெயிச்சார் என்று உள்ளூர் டீக்கடை அரசியல் விமர்சகர்கள் முதல்,செளகிதாத் சாப் வரை பேசுவார்கள்.அது தெரியாதா,சிதம்பரம் நிதியமைச்சராக வரக்கூடாதுங்கறதுக்காக பாம்பேல இருந்தும் குஜராத்துல இருந்தும் சேட்டுக பெட்டி பெட்டிய பணத்தோட வந்து அள்ளி விட்டாங்க தெரியுமா என்பார்கள் எதிரணியினர்.

kannappan ttn

 

பலியாகுமா எம்.பி செந்தில்நாதன்  அமைச்சர் பாஸ்கர் நட்பு!

ப.சிதம்பரத்தையும் ராஜ கண்ணப்பனையும் விட்டால் தனிப்பட்ட செல்வாக்குள்ளவர்கள் இந்த தொகுதியில் யாருமில்லை! இப்போதைய எம்.பி செந்தில்நாதனுக்கும் அமைச்சர் பாஸ்கருக்கும் இடையே இருந்த நட்பை இந்த பாராளுமன்ற தேர்தல் பலி கொண்டுவிட்டது.

baskaran ttn

 

அடம்பிடிக்கும் எம்பி ; முரண்டு பிடிக்கும் அமைச்சர் 

அமைச்சர் பாஸ்கரன்,தன் மகன் கருணாகரனை எம்.பி ஆக்க ஆசைப்படுகிறார்.செந்தில் நாதனோ நான்தான் நிற்பேன் என்று அடம் பிடிக்கிறார்.

chidambaram ttn

 

சிவகங்கையில் களமிறங்கும் ஹெச்.ராஜா?

இந்த இருவரையும் விட்டால் அ.தி.மு.க-வுக்கு அடுத்த சாய்ஸ் ராஜ.கண்ணப்பந்தான்.ஆனால்,அவர் ஒ.பி.எஸ்,ஈ.பி.எஸ்ஸுக்கெல்லாம் சூப்பர் சீனியர்.அதனால் எதற்கு வம்பு என்று சிவகங்கைய பி.ஜே.பி-க்கு தாரைவார்த்து விட்டது அ.தி.மு.க.அடுத்த நாளே,அங்கே ஹெச்.ராஜாவை நிறுத்தக்கூடாது என்ற கண்டிசனோடுதான் சிவகங்கை விட்டுக்கொடுக்கபட்டது என்று ஒரு புதிய வதந்தி கிளம்பியது.

raja h
கார்த்திக் சிதம்பரத்திற்கு வாய்ப்பு?

அதற்கேற்ப பி.ஜே.பி இன்னும் வேட்பாளர் லிஸ்டை வெளியிடாமல் தாமதிப்பது இந்த வதந்திகளுக்கு வலுச்சேர்க்கிறது.ஆரம்பம் முதலே தி.மு.க கூட்டணியில் சிவகங்கை தொகுதி காங்கிரசுக்குத்தான் என்பதில் யாருக்கு குழப்பமில்லை. ஆனால் வேட்பாளர் யார்? சிதம்பரம் ராஜ்யசபை உறுப்பினராக இருப்பதால் அவர் மகன் கார்த்திக் சிதம்பரம் நிற்கிறார் என்றனர்.

senthil ttn

 

 

அவர் கடந்த முறை சுயேட்சையாக போட்டியிட்டே ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தாலும் அவர்மீது ஏகப்பட்ட வழக்குகள் இருப்பதால் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி நிற்கிறார் என்றார்கள்,கடைசியில் அதெல்லாம் இல்லை சிவகங்கைத் தொகுதியில் ஒரு புதிய சர்ப்ரைஸ் வேட்பாளரை களமிறக்கப் போகிறது காங்கிரஸ்.

alagiri ttn
ஜாதி ஓட்டுகள் பலம்

அது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரியாகக்கூட இருக்கலாம் என்பது இன்றைய சிவகங்கை நிலவரம்.பி.ஜே.பி-யின் தயக்கத்துக்கு காரணம் ஜாதி ஓட்டுகள். சிதம்பரம்,கண்ணப்பன்,செந்தில்நாதன் ஆகியோருக்கு அவர்களது ஜாதி ஓட்டுகள் பலம்.ஆனால் ஹெச்.ராஜாவின் கதை வேறு.அவருக்காக வேலை செய்ய பி.ஜே.பி-யில் உள்ளூர் இளைஞர்கள் நூறு பேர்கூட தேர மாட்டார்கள் என்பது நிதர்சனம்.புகழ் பெற்ற சிராவயல் ஜல்லிக்கட்டு இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடக்கும் விழா.ஜல்லிக்கட்டு போராடத்தின்போது ராஜா பேசிய பேச்சுக்களை உள்ளூர் இளைஞத்கள் மறக்கவில்லை.

வதந்திகளில் இருந்து விடுதலை கிடைப்பது எப்போது!?

அ.தி.மு.க ஆதரவிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.உள்ளூர் அ.தி.மு.க-வுடன் ராஜாவுக்கு.சுமுக உறவு இருந்ததே இல்லை.என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக காத்திருக்கும் சிவகங்கை மக்களுக்கு வதந்திகளில் இருந்து விடுதலை கிடைப்பது எப்போது!?

manikkodimohan Mon, 03/18/2019 - 12:51
sivagangai H Raja election 2019 sivagangai candidate சிவகங்கை வேட்பாளர்கள் தேர்தல் களம் தொகுதி நிலவரம்

English Title

Sivaganga Parliamentary election: h raja may contest in sivagangai? report

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.