முடிவுக்கு வந்த இழுபறி : திமுக கூட்டணியில் இறுதியாகும் தொகுதிகள்!

முடிவுக்கு வந்த இழுபறி : திமுக கூட்டணியில் இறுதியாகும் தொகுதிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சியுள்ளது. வரும் 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கவிருப்பதால் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தொகுதிகளை பிரித்து வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் தொகுதி பங்கீத்தில் இழுபறி நீடிக்கிறது.

முடிவுக்கு வந்த இழுபறி : திமுக கூட்டணியில் இறுதியாகும் தொகுதிகள்!

ஆனால் திமுகவோ, தன்னுடன் கூட்டணி அமைக்கும் அனைத்து கட்சிகளுடனும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டது. பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டில் அதிருப்தியே மிஞ்சியது என்றாலும், வேறு வழி இல்லாமல் கொடுத்த தொகுதிகளை வாங்கிக் கொண்டன. தற்போது திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை பிரித்து வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முடிவுக்கு வந்த இழுபறி : திமுக கூட்டணியில் இறுதியாகும் தொகுதிகள்!

இன்று காலை ஐ.எம்.யூ.எல் கட்சியுடன் ஆலோசனை நடத்திய திமுக, கடையநல்லூர் தொகுதியை அக்கட்சிக்கு இறுதி செய்தது. மற்ற 2 தொகுதிகளும் இன்று மாலைக்குள் இறுதியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சுப்பராயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

முடிவுக்கு வந்த இழுபறி : திமுக கூட்டணியில் இறுதியாகும் தொகுதிகள்!

அப்போது பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கிய 6 தொகுதிகள் எவை என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் நாளை முடிவாகும் என்று தெரிவித்தார். வரும் திங்கள் கிழமை வேட்பு மனுதாக்கல் தொடங்கவிருப்பதால், அதற்குள்ளாகவே திமுக தொகுதி பங்கீடுகளை இறுதி செய்து பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.