டிராக்டர் பேரணியில் விவசாய தலைவர்களை கொல்ல சதி திட்டம் : அதிர்ச்சி தகவல்!

 

டிராக்டர் பேரணியில் விவசாய தலைவர்களை கொல்ல சதி திட்டம் : அதிர்ச்சி தகவல்!

டெல்லியில் நடைபெற உள்ள டிராக்டர் பேரணியின் போது விவாசாயிகள் சங்க தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் கடந்த ஆண்டு நவ.26ம் தேதியில் இருந்து தற்போது வரை போராட்டம் தொடருகிறது. இந்த போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். இருப்பினும் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்த விவசாயிகள், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 26ம் தேதி டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்தனர்.

டிராக்டர் பேரணியில் விவசாய தலைவர்களை கொல்ல சதி திட்டம் : அதிர்ச்சி தகவல்!

போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. இந்த நிலையில், பேரணியின் போது விவசாயி தலைவர்கள் 4 பேரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர். இதற்காக ஒரு நபர் போராட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்திருப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.

சந்தேகத்திற்கு இடமான வகையில் போராட்டத்தில் நுழைந்த நபர், பேரணியின் போது விவசாயிகள் மீது தடியடி நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த நபரை விவசாயிகள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விவசாய சங்கத் தலைவர்களின் வழிகாட்டுதல் படியே, இந்த போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தெரிய வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்புலத்தில், மத்திய அரசு இருப்பதாகவும் கூறப்படுகிறது.