யாரும் காங்கிரஸை விட்டு போக மாட்டார்கள், உண்மையில் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள்தான் எங்க கட்சியில சேர விரும்புகிறார்கள்

யாரும் காங்கிரஸை விட்டு போக மாட்டார்கள், உண்மையில் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள்தான் எங்க கட்சியில சேர விரும்புகிறார்கள்

எந்த தலைவர்களும் காங்கிரஸை விட்டு வெளியேற மாட்டார்கள். உண்மையில் மற்ற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள்தான் காங்கிரசில் சேர விரும்புகிறார்கள் என்று பஞ்சாப் காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

பஞ்சாப் காங்கிரசில் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், எம்.எல்.ஏ. நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையிலான மோதலை தீர்க்க அந்த கட்சியின் மேலிடம் படாதபாடு பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் காங்கிர பஞ்சாப் காங்கிரசின் பிரபல தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அஸ்வானி சேக்ரி, சிரோமணி அகாலிதளத்தில் சேர போவதாக வெளியான தகவலால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்தது.

யாரும் காங்கிரஸை விட்டு போக மாட்டார்கள், உண்மையில் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள்தான் எங்க கட்சியில சேர விரும்புகிறார்கள்
அஸ்வானி சேக்ரி

இதனையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் அஸ்வானி சேக்ரியை சந்தித்து அவரை சமாதானம் செய்தனர். பஞ்சாப் காங்கிரசின் மூத்த தலைவர் ராஜ் குமார் வெர்கா, அஸ்வானி சேக்ரியை சந்தித்து பேசினார். இது தொடர்பாக ராஜ் குமார் வெர்கா கூறியதாவது: அஸ்வானி ஒரு காங்கிரஸ்காரர். நான் அவருடைய குடும்பத்தினருடன் அமர்ந்து பேசினேன். அவரை காங்கிரஸ் மேலிட தலைவர் ஹரிஷ் ராவத் மற்றும் அமரீந்தர் சிங் ஆகியோருடன் பேச செய்தேன்.

யாரும் காங்கிரஸை விட்டு போக மாட்டார்கள், உண்மையில் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள்தான் எங்க கட்சியில சேர விரும்புகிறார்கள்
ராஜ் குமார் வெர்கா

அவர்களிடம் பேசிய பிறகு அஸ்வானி சேக்ரி எங்கும் செல்ல (எந்த கட்சிக்கும்) மாட்டேன் என்று முடிவு செய்துள்ளார். நாளைக்குள் (இன்றைக்குள்) அவர் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்திப்பார். கட்சியில் யாரும் வருத்தப்படுவதில்லை. எந்த தலைவர்களும் காங்கிரஸை விட்டு வெளியேற மாட்டார்கள். உண்மையில் மற்ற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் காங்கிரசில் சேர விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.