குளிர்காலத்தில் விலை உயர பெட்ரோல், டீசல் என்ன சீசன் பழங்களா? மத்திய அமைச்சரை கிண்டலடித்த காங்கிரஸ்

குளிர்காலத்தில் விலை உயர பெட்ரோல், டீசல் என்ன சீசன் பழங்களா? மத்திய அமைச்சரை கிண்டலடித்த காங்கிரஸ்

குளிர்காலத்தில் விலை உயர என்ன பெட்ரோல்,டீசல் மற்றும் எரிபொருள் சீசன் பழங்களா? என்று பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.

பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த சில தினங்களுக்கு முன் முன்னணி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய விலை அதிகரிப்பு நுகர்வோரையும் பாதித்துள்ளது. குளிர்காலம் கடந்து செல்லும்போது (முடிந்த பிறகு) விலை கொஞ்சம் குறையும். இது ஒரு சர்வதேச விஷயம். தேவை அதிகமாக உள்ளதால் விலை அதிகமாக உள்ளது. இந்த நிகழ்வு குளிர்காலத்தில் நடக்கிறது. சீசன் முடிவடைந்தவடன் அது (விலை) கீழே வரும் என்று தெரிவித்தார்.

குளிர்காலத்தில் விலை உயர பெட்ரோல், டீசல் என்ன சீசன் பழங்களா? மத்திய அமைச்சரை கிண்டலடித்த காங்கிரஸ்
டீசல், பெட்ரோல் விலை உயர்வு

தர்மேந்திர பிரதான் இந்த கருத்தை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் அஜோய் குமார் இது தொடர்பாக டிவிட்டரில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் குளிர்காலம் குறையும்போது, விலைகளும் குறையும். இது குளிர்காலத்தில் நடக்கும் என்கிறார். இது விசித்திரமானது பெட்ரோல் மற்றும் கியாஸ் என்ன பருவகால பழங்கள்? பா.ஜ.க.வால் எரிபொருள் கொள்ளை என பதிவு செய்து இருந்தார்.

குளிர்காலத்தில் விலை உயர பெட்ரோல், டீசல் என்ன சீசன் பழங்களா? மத்திய அமைச்சரை கிண்டலடித்த காங்கிரஸ்
ஆட்டோ ரிக்ஷாவை இழுக்கும் சசி தரூர்

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எரிபொருள் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சி எம்.பி. சதி தரூர் ஆட்டோ ரிக்ஷாவை கயிறு கட்டி இழுத்தார். பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது வீட்டிலிருந்து பாட்னாவில் உள்ள தலைமை செயலகத்துக்கு சைக்களில் வந்தார்.