ராமர் கோயில் கட்டுமானத்துக்கு ரூ.1.11 லட்சம் நன்கொடை கொடுத்த திக்விஜய சிங்.. கூடவே மோடிக்கு 2 பக்க கடிதம்

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு ரூ.1.11 லட்சம் நன்கொடை கொடுத்த திக்விஜய சிங்.. கூடவே மோடிக்கு 2 பக்க கடிதம்

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு காங்கிரஸ் கட்சியிலிருந்து முதலாவதாக திக்விஜய சிங் ரூ.1.11 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார். கூடவே பிரதமர் மோடிக்கு 2 பக்க கடிதத்தில் தனது வழக்கமான குசும்பையும் காட்டியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய சிங் எப்போதும் அதிரடி கருத்துக்களுக்கு பெயர் போனவர். ராமர் கோயில் கட்டுமானத்துக்கு விஷ்வ இந்து பரிஷத் நாடு முழுவதும் நிதி திரட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து முதலாவதாக திக்விஜய சிங் ராமர் கோயில் கட்டுமான பணிக்காக ரூ.1.11 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு ரூ.1.11 லட்சம் நன்கொடை கொடுத்த திக்விஜய சிங்.. கூடவே மோடிக்கு 2 பக்க கடிதம்
பிரதமர் மோடி

ராமர் கோயிலுக்கு தனது பங்களிப்பான ரூ.1.11 லட்சத்தை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பெயருக்கு காசோலையாக எடுத்து அதனுடன் 2 பக்க கடிதம் ஒன்றையும் சேர்த்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், கடந்த காலத்தில் விஷ்வ இந்து பரிஷத் ராமர் கோயிலுக்காக திரட்டிய நிதி விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வலியுறுத்துங்க என்று அந்த கடிதத்தில் பிரதமர் மோடிக்கு திக்விஜய சிங் வலியுறுத்தியுள்ளார்.

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு ரூ.1.11 லட்சம் நன்கொடை கொடுத்த திக்விஜய சிங்.. கூடவே மோடிக்கு 2 பக்க கடிதம்
திக்விஜய சிங்கின் காசோலை

மேலும் அந்த கடிதத்தில், விஷ்வ இந்து பரிஷத் ராமர் கோயிலுக்காக 44 நாள் நிதி திரட்டும் பிரச்சாரத்தை கடந்த 15ம் தேதி தொடங்கியதையும், அந்த பிரச்சாரத்தில் ஆயுத பேரணிகளும் இடம் பெற்றதையும், இந்தூர், உஜ்ஜைன் மற்றும் மாண்ட்சூர் ஆகிய மாவட்டங்களில் மோதல் நடந்ததையும் குறிப்பிட்டு, ஒரு சமூகத்தை தூண்டுவதற்காக லத்திகளையும், வாள்களையும் சுமந்து கொண்டு கோஷங்களை எழுப்புவது எந்தவொரு மத விழாவிலும் ஒரு பகுதியாக இருக்க முடியாது. இத்தகைய நடவடிக்கைகள் இந்து மதத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியாது. இத்தகைய நடவடிக்கையால் ஏற்கனவே 3 அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. இது சமூகத்தில் சமூக நல்லிணக்கத்தை சேதப்படுத்தியுள்ளது என்று திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.