அசாமில் பா.ஜ.க.வுக்கு பயந்து வேட்பாளர்களை தலைமறைவாக வைக்கும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள்

 

அசாமில் பா.ஜ.க.வுக்கு பயந்து வேட்பாளர்களை தலைமறைவாக வைக்கும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள்

அசாமில் பா.ஜ.க.வுக்கு பயந்து காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அந்த மாநிலத்துக்கு வெளியே தலைமறைவாக வைக்க தொடங்கியுள்ளன.

அசாமில் நடந்து முடிந்து அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்), சி.பி.ஐ. (எம்.எல்.), பி.பி.எப். மற்றும் ஏ.ஜி.எம். ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மே 2ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அசாமில் பா.ஜ.க.வுக்கு பயந்து வேட்பாளர்களை தலைமறைவாக வைக்கும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

இந்நிலையில் அண்மையில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி தனது 20 வேட்பாளர்களில் 18 பேரை காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அழைத்து சென்று ரகசிய இடத்தில் தலைமறைவாக வைத்துள்ளது. பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபட்டு தனது வேட்பாளர்களை இழுத்து விடும் என்ற அச்சத்தில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது.

அசாமில் பா.ஜ.க.வுக்கு பயந்து வேட்பாளர்களை தலைமறைவாக வைக்கும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள்
போடோலேண்ட் மக்கள் கட்சி

தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள போடோலேண்ட் மக்கள் கட்சியும் தனது வேட்பாளர்களில் குறைந்தபட்சம் 10 பேரை பூடானுக்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று பிபிஎப் கட்சியின் வேட்பாளர்களில் குறைந்தபட்சம் 10 பேர் பூடானுக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், மே 2ம் தேதி வரை அவர்கள் அங்கு இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து பி.பி.எப். கட்சியின் மூத்த தலைவர் பிரமிலா ராணி பிரம்மா கூறுகையில், அவர்கள் (வேட்பாளர்கள்) இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் வேட்பாளர்கள் அசாமுக்கு வெளியே உள்ளனர். அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நான் எங்கும் செல்லவில்லை என தெரிவித்தார்.