50 தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு காங்கிரஸ் கடிதம்! 20 தான் முடியும் என்கிறது திமுக

 

50 தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு காங்கிரஸ் கடிதம்! 20 தான் முடியும் என்கிறது திமுக

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. கூட்டணி உறுதி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸின் மூத்த தலைவரான உம்மன் சாண்டி, தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் குண்டுராவ் உள்ளிட்டோர் சென்னை வந்தனர். திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்பது என்பது குறித்து நேற்றே காங்கிரஸ் ஆலோசனை நடத்தியது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளை காங்கிரஸ் திமுகவிடம் கேட்டதாக தெரிகிறது. இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக-காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக தெரிவித்தார்.

50 தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு காங்கிரஸ் கடிதம்! 20 தான் முடியும் என்கிறது திமுக

இந்நிலையில் திமுக -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகள் கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைமை கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கங்களில் தான் தொகுதிகளை வழங்க திமுக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ்க்கு திமுக 20 இடங்கள் மட்டுமே கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.