6 மாதத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார்… கமிட்டி கூட்டத்தில் முடிவு

 

6 மாதத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார்… கமிட்டி கூட்டத்தில் முடிவு

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று தனது கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதியன்று சோனியா காந்தியின் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார். இந்த சூழ்நிலையில் அரசியல் தலைமையை மாற்றக்கோரியும், காங்கிரஸ் காரிய கமிட்டியின் (செயற்குழு) தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். மேலும் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துவருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தொடர விரும்பவில்லை என சோனியா காந்தி கூறியதாக தகவல் வெளியானது.

6 மாதத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார்… கமிட்டி கூட்டத்தில் முடிவு

இந்நிலையில் காலை 11 மணி முதல் நடைபெற்றுவந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சற்று நேரத்திற்கு முன் நிறைவடைந்தது. 6 மாதத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அதுவரை சோனியாவே தலைவராக நீடிப்பார் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.