“ஜெய்ஹிந்த் சொல்வதில் பெருமை” – கவனத்தை ஈர்க்கும் காங்கிரஸின் திடீர் பதிவு!

 

“ஜெய்ஹிந்த் சொல்வதில் பெருமை” – கவனத்தை ஈர்க்கும் காங்கிரஸின் திடீர் பதிவு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை பேசுபொருளாகியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் இடம்பெறாதது இதற்கு முக்கிய காரணம். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்எல்ஏ ஈஸ்வரன், கடந்த ஆண்டு ஆளுநர் உரையின் முடிவில் ஜெய்ஹிந்த் என முடிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஆளுநர் உரையில் நன்றி வணக்கம் மட்டுமே இருந்தது. தமிழகம் தலை நிமிர தொடங்கிவிட்டது என கூறியிருந்தார்.

“ஜெய்ஹிந்த் சொல்வதில் பெருமை” – கவனத்தை ஈர்க்கும் காங்கிரஸின் திடீர் பதிவு!

எம்எல்ஏ ஈஸ்வரன் இவ்வாறு பேசியது சட்டமன்றத்தில் எந்த கலகத்தையும் ஏற்படுத்தவில்லை. அப்போது அமைதியாக இருந்த பாஜகவினர் கூட்டத்தொடர் முடிந்த பிறகு இந்த விவகாரத்தை சர்ச்சையாக்கினர். ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நீக்கப்பட்டதற்கு எம்எல்ஏ ஈஸ்வரன் பாராட்டு தெரிவிக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு இடமில்லை என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியிருந்தார். அதோடு, ஈஸ்வரனுக்கு எதிராக பாஜகவினர் போர்க்கொடியை உயர்த்தியுள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த ஈஸ்வரன், என்னுடைய உரையை முழுமையாக கேட்காமல் 15 நொடிகளுக்கு மட்டும் எடிட் செய்து அதனை அரசியல் ஆக்குகின்றனர். இரு அரசின் ஆளுநர் உரையை தான் ஒப்பிட்டு பேசினேன் என கூறியிருந்தார். இந்த சர்ச்சைக்கு இடையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘ஜெய்ஹிந்த் சொல்வதில் பெருமை’ என வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பெருமையோடு சொல்வோம் என சோனியா காந்தி கூறுவதுபோல அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.