மம்தா ரூட் கிளியர்… ஜகா வாங்கிய காங்கிரஸ் – பாஜகவுக்கு செக் மேட்!

 

மம்தா ரூட் கிளியர்… ஜகா வாங்கிய காங்கிரஸ் – பாஜகவுக்கு செக் மேட்!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் கோட்டை பபானிபூர் தொகுதி. சுவேந்து அதிகாரி சவாலை ஏற்று கோட்டையை விட்டு நந்திகிராமில் போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது, ஆரம்பத்தில் பின்னடைவில் இருந்தார் மம்தா. 6ஆவது சுற்றுக்குப் பின் லீட் எடுத்தார். முடிவில் மம்தா 1,500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் தேர்தல் ஆணையம் மம்தா தோல்வியடைந்ததாக அறிவித்தது. சுவேந்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார்.

மம்தா ரூட் கிளியர்… ஜகா வாங்கிய காங்கிரஸ் – பாஜகவுக்கு செக் மேட்!

இந்த வழக்கில் வெற்றிபெறுவதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிடும். இது மம்தாவுக்கும் தெரியும். மாதங்களுக்குள் இடைத்தேர்தலில் எம்எல்ஏவானால் தான் முதலமைச்சர் பதவியில் நீடிக்க முடியும். ஆகவே மீண்டும் கோட்டைக்குச் செல்ல முடிவெடுத்தார். அதற்காக அங்கு எம்எல்ஏவாக இருந்த ஷோபன்தேவ் சட்டோபாத்யாயை ராஜினாமா செய்ய வைத்தார். தற்போது அந்தத் தொகுதியோடு சேர்த்து மொத்தம் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வருகின்ற 30ஆம் தேதி தேர்தல். அக்டோபர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை.

மம்தா ரூட் கிளியர்… ஜகா வாங்கிய காங்கிரஸ் – பாஜகவுக்கு செக் மேட்!

தற்போது அங்கு வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என மீண்டும் தேர்தல் பரபரப்புகள் தொடங்கியுள்ளன. பபானிபூர் மம்தாவின் ஆஸ்தான தொகுதி. இருமுறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதலமைச்சரானார். ஆளுங்கட்சி தலைவர், முதலமைச்சர், பேவரைட் தொகுதி என மம்தாவிற்கே சாதகமான அம்சங்கள் அதிகமாக உள்ளன. மம்தாவை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறது. யாரை நிறுத்தலாம் என ஆலோசித்து வருகிறது. மூன்றாவது அணியாக உள்ள காங்கிரஸ்+இடதுசாரியின் முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது.

மம்தா ரூட் கிளியர்… ஜகா வாங்கிய காங்கிரஸ் – பாஜகவுக்கு செக் மேட்!

இச்சூழலில் மம்தாவை எதிர்த்து போட்டியிட போவதில்லை என மேற்கு வங்க காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் மம்தாவை எதிர்த்து போட்டியிட வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிவந்தார். ஆனால் டெல்லி காங்கிரஸ் தலைமை இதனை விரும்பவில்லை. மம்தாவிற்கு விழும் வாக்குகளைப் பிரிக்கும் பட்சத்தில் அது பாஜகவுக்குச் சாதகமாக முடியவே வாய்ப்புகள் அதிகம். ஆகவே எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போலவே 2024 மக்களவை தேர்தலைக் கருத்தில்கொண்டு சோனியாவும் மம்தாவும் கைகோர்த்திருக்கிறார்கள். அதன் அடிப்படையிலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.