“என்னது ஒருத்தர் கூட சாகலயா?… என்ன விளையாடுறீங்களா?” – மத்திய அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய காங்கிரஸ்!

“என்னது ஒருத்தர் கூட சாகலயா?… என்ன விளையாடுறீங்களா?” – மத்திய அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய காங்கிரஸ்!

கொரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியாவே தவித்தது. இதனால் ஏற்பட்ட மரண ஓலங்கள் காதைக் கிழித்தன. தற்போது இந்தியாவில் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. இதைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து கேள்வியெழுப்பினர்.

“என்னது ஒருத்தர் கூட சாகலயா?… என்ன விளையாடுறீங்களா?” – மத்திய அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய காங்கிரஸ்!

அதற்குப் பதலளித்த சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பவார், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியாவில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற புது குண்டை தூக்கி போட்டார். சுகாதாரம் மாநில பட்டியல் இருப்பதாகவும், அவர்கள் கொடுத்த புள்ளிவிவரங்களின்படியே உயிரிழப்புகள் இல்லை என்று தாங்கள் கூறுவதாகவும் தெரிவித்தார். அதேபோல மத்திய அரசின் வேலை புள்ளிவிவரங்களை வாங்கி பதிவுசெய்வது மட்டுமே எனக் கூறி மொத்த பழியையும் மாநிலங்களின் தலையில் கட்டினார்.

“என்னது ஒருத்தர் கூட சாகலயா?… என்ன விளையாடுறீங்களா?” – மத்திய அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய காங்கிரஸ்!

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கண் முன்னே நடந்த கொடூரங்களை மறைத்து இவ்வாறு பச்சையாக பொய் சொல்லலாமா என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன. மாநில அரசுகளோ, கொரோனா மரணங்களை வெளிப்படையாகக் கூறுவதற்கு மத்திய அரசு தங்களைத் தடுத்ததாக தெரிவிக்கின்றன. கொரோனா மரணங்களை மூடி மறைக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டதாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கூறினார். மகாராஷ்டிர அரசு சார்பாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“என்னது ஒருத்தர் கூட சாகலயா?… என்ன விளையாடுறீங்களா?” – மத்திய அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய காங்கிரஸ்!

இவ்விவகாரம் பூதாகரமானதையடுத்து தமிழ்நாடு மருத்துவ துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாகப் பேசிய அவர், “கொரோனா இரண்டாம் அலையின்போது, தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை. அனைத்து மருத்துவமனைகளுக்கும் போதுமான ஆக்சிஜன் கிடைக்க அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது” என்றார்.

“என்னது ஒருத்தர் கூட சாகலயா?… என்ன விளையாடுறீங்களா?” – மத்திய அமைச்சருக்கு எதிராக களமிறங்கிய காங்கிரஸ்!

இவ்வாறு வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் தவறான தகவலை அளித்தமைக்காக இணை அமைச்சர் பாரதி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உறுதிப்படுத்தினார்.