சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசவர் என கைதான பா.ஜ.க. தலைவர்… அமித் ஷாவை கிண்டலடித்த காங்கிரஸ்

 

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசவர் என கைதான பா.ஜ.க. தலைவர்… அமித் ஷாவை கிண்டலடித்த காங்கிரஸ்

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசவர் என்று கைதான வடக்கு மும்பையின் சிறுபான்மையினர் பிரிவு பா.ஜ.க. தலைவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அமித் ஷாவை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வின் வட மும்பையின் சிறுபான்மையினர் பிரிவு தலைவராக இருப்பவர் ரூபல் ஜோனு ஷேக். 24 வயதான ரூபல் ஜோனு ஷேக் 2011ம் ஆண்டு முதல் மும்பையில் வசித்து வருகிறார். அவர் போலி ஆவணங்கள் வாயிலாக பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு போன்ற அடையாள கார்டுகளை பெற்றிருந்தார். இந்த சூழ்நிலையில், சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களை கண்டறியும் மும்பை போலீசாரின் சோதனையின்போது ரூபல் ஜோனு ஷேக் சிக்கினார்.

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசவர் என கைதான பா.ஜ.க. தலைவர்… அமித் ஷாவை கிண்டலடித்த காங்கிரஸ்
ரூபல் ஜோனு ஷேக்

இதனையடுத்து போலீசார் அவரது ஆவணங்களை சோதனை செய்ததில், மேற்கு வங்கத்தில் 24 வடக்கு பர்கானாஸ் முகவரி மற்றும் பள்ளி விவரங்கள் போலியானவை கண்டறிந்தனர். மேலும், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளார் என்ற குற்றச்சாட்டின் கீழ் போலீசார் அண்மையில் ரூபல் ஜோனு ஷேக்கை கைது செய்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று ரூபல் ஜோனு ஷேக் போட்டோவை சமூக வலைதளங்களில் பார்த்த பா.ஜ.க. எம்.பி. கோபால் ஷெட்டி, ரூபல் ஷேக்கை அடையாளம் கண்டுபிடித்தார். இதனையடுத்துதான் இந்த செய்தி வைரலானது.

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசவர் என கைதான பா.ஜ.க. தலைவர்… அமித் ஷாவை கிண்டலடித்த காங்கிரஸ்
சச்சின் சாவந்த்

சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்தவர் பா.ஜ.க.வின் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்ததை குறிப்பிட்டு, குடியுரிமை திருத்த சட்டத்தில் (சி.ஏ.ஏ.) பா.ஜ.க. உறுப்பினர்களுக்கு அமித் ஷா சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறாரா? என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கிண்டலடித்துள்ளார். மேலும் டிவிட்டரில், வடக்கு மும்பை பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தலைவர் வங்கதேசவராக மாறி விட்டார். நாங்கள் பா.ஜ.க.விடம் கேட்க விரும்புகிறோம். இது சங்க் ஜிகாத்தா? பா.ஜ.க.வுக்கு சி.ஏ.ஏ.ன்கீழ் சிறப்பு ஏற்பாடுகள் உள்ளதா? நாட்டுக்கு ஒரு சட்டம், பா.ஜ.க.வுக்கு ஒரு சட்டம் என பதிவு செய்துள்ளார்.