darbar
  • January
    21
    Tuesday

Main Area

Main



சிவசேனாவை ஆதரிப்பதா... குழப்பத்தில் காங்கிரஸ்!

சிவசேனா,காங்கிரஸ்
சிவசேனா,காங்கிரஸ்

மகாராஷ்டிராவில் சிவசேனாவை ஆதரிப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் குழம்பி வருவதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் ஆளும் பா.ஜ.க - சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைத்தன. ஆனால், முதல் இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவைச் சார்ந்தவர் முதல்வராக இருக்க வேண்டும் என்று  நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க பா.ஜ.க மறுத்துவிட்டது.

sonia

இந்த நிலையில், மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வரவே, அதிக இடங்களை வென்ற பா.ஜ.க-வை ஆட்சி அமைக்க வரும்படி அம்மாநில ஆளுநர் அழைத்தார். பெரும்பான்மை ஆதரவு பெற முடியாத சூழலில் ஆளுநரின் அழைப்பை பா.ஜ.க நிராகரித்தது.
இதையடுத்து அடுத்த பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்புவிடுத்தார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்று மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துவிடலாம் என்று சிவசேனா திட்டமிட்டு வருகிறது. இதற்காக சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை நேரில் சந்தித்து பேசினார். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி  கூட்டம் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் இன்று காலை நடந்தது. அந்த கூட்டத்தில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து மீண்டும் மாலையில் கூடி விவாதிப்பது என்று கூறி கூட்டம் கலைந்திருக்கிறது. 
இப்போதுதான் தேர்தல் முடிந்துள்ளது. மீண்டும் ஒரு சட்டமன்ற தேர்தலை சந்திக்க மகாராஷ்டிரா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை... மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர்கள் தங்கள் கருத்துக்களை தலைமையிடம் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.