முதல்வர் பொறுப்பை ஏற்க நான் தயார்.. நானா படோல் அதிரடி அறிவிப்பு.. சிவ சேனா கூட்டணிக்குள் புகைச்சல்

முதல்வர் பொறுப்பை ஏற்க நான் தயார்.. நானா படோல் அதிரடி அறிவிப்பு.. சிவ சேனா கூட்டணிக்குள் புகைச்சல்

மகாராஷ்டிராவின் முதல்வர் பொறுப்பை ஏற்க நான் தயார் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் நானோ படோல் கூறியிருப்பது ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அண்மையில், மகாராஷ்டிரவில் எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சிகள் இணைந்த போட்டியிடும் என்று தெரிவித்து இருந்தார்.

முதல்வர் பொறுப்பை ஏற்க நான் தயார்.. நானா படோல் அதிரடி அறிவிப்பு.. சிவ சேனா கூட்டணிக்குள் புகைச்சல்
சோனியா காந்தி, உத்தவ் தாக்கரே, சரத் பவார்

இந்நிலையில் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: விதர்பா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளின் விருப்பம் என்னவென்றால், விவசாயின் மகன் மகாராஷ்டிரவின் அடுத்த முதல்வராக மாற வேண்டும். விவசாயின் மகனாக இருப்பதால் நான் முதல்வராக வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்.

முதல்வர் பொறுப்பை ஏற்க நான் தயார்.. நானா படோல் அதிரடி அறிவிப்பு.. சிவ சேனா கூட்டணிக்குள் புகைச்சல்
காங்கிரஸ்

அந்த தேர்தல்களில் காங்கிரஸ் நல்ல எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸை நம்பர் ஒன் கட்சியாக மற்றும் மகாராஷ்டிராவுக்கு காங்கிரஸ் முதல்வரை விரும்பும் பலர் இன்னும் இருக்கிறார்கள். நான் ஒருபோதும் கட்சியிடம் எதுவும் கேட்கவில்லை. என்னை நம்பி சபாநாயகர் பொறுப்பை கட்சி மேலிடம் வழங்கியது. பின்னர் மேலிடம் என்னை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநில தலைவர் பதவியை ஏற்கும்படி கேட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவரின் இந்த கருத்து சிவ சேனா கூட்டணிக்குள் புதிய புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.