ஊழல் வழக்குகளிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள பா.ஜ.க. விளையாட்டை மாயாவதி விளையாடுகிறார்.. காங்கிரஸ்

ஊழல் வழக்குகளிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள பா.ஜ.க. விளையாட்டை மாயாவதி விளையாடுகிறார்.. காங்கிரஸ்

ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கை தற்போது நீதிமன்றம் விசாரித்து வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்தது தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் அழுத்தத்தின்கீழ் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளார்.

ஊழல் வழக்குகளிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள பா.ஜ.க. விளையாட்டை மாயாவதி விளையாடுகிறார்.. காங்கிரஸ்

சட்டப்படிதான் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுடன் இணைக்கப்பட்டனர். மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்கள் பா.ஜ.க.வில் இணைந்த போது யாரும் கேள்வி கேட்கவில்லை என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.எல். புனியா செய்தியாளர்களிடம் கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தன்னையும், தனது சகோதரரையும் தங்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளிலிருந்து பாதுகாத்து கொள்ள பா.ஜ.க.வின் விளையாட்டை விளையாடுகிறார் என பதிவு செய்து இருந்தார்.

ஊழல் வழக்குகளிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள பா.ஜ.க. விளையாட்டை மாயாவதி விளையாடுகிறார்.. காங்கிரஸ்

முன்னதாக மாயாவதி, ராஜஸ்தானில் பகுஜக் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை காங்கிரஸ் கைப்பற்றியது தொடர்பாக கூறுகையில், காங்கிரசுக்கு சரியான பாடம் கற்பிக்க காத்திருப்பதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தனது 6 எம்.எல்.ஏ.க்களின் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. இந்த சூழ்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேரையும் காங்கிரஸ் தன்னுடன் இணைத்து கொண்டது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என அதன் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.