“பயப்படலன்னா… எதுக்கு திடீர்னு பேட்டி குடுக்கணும்” – ஜெயக்குமாரை விளாசிய செல்வபெருந்தகை!

 

“பயப்படலன்னா… எதுக்கு திடீர்னு பேட்டி குடுக்கணும்” – ஜெயக்குமாரை விளாசிய செல்வபெருந்தகை!

கோடநாடு விவகாரத்தை சட்டப்படி அணுக திராணி இல்லையென அதிமுகவை சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்தார்.

கோடநாடு கொலை வழக்கை சட்டப்பேரவையில் விவாதிக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கில் அதிமுகவினரை இணைக்க திமுக அரசு சதித்திட்டம் தீட்டுவதாக எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். இத்தகைய சூழலில் கோடநாடு விவகாரத்தை பற்றி பேச காங்கிரஸ் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது அதிமுகவினரை அதிருப்தி அடையச் செய்தது. இன்று காலை திடீரென செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கையில் கோடநாடு விவகாரம் பற்றி பேச நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருப்பது பேரவை மரபை மீறும் செயல் என்று தெரிவித்திருந்தார்.

“பயப்படலன்னா… எதுக்கு திடீர்னு பேட்டி குடுக்கணும்” – ஜெயக்குமாரை விளாசிய செல்வபெருந்தகை!
abo

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கொடநாடு விவகாரத்தில் காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருக்கும் சூழலில் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற விதமாக ஜெயக்குமார் ஏன் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். கோடநாடு விவகாரத்தை நாங்கள் சட்டப்படி அணுகுகிறோம்; அதிமுகவைப் போல ஆளுநரை சந்திக்கவோ, பதற்றப்படவோ இல்லை என்று தெரிவித்தார். மேலும், கோடநாடு விவகாரத்தை சட்டப்படி அணுக திராணி இல்லாமல், அதிமுக பதறி அடித்துக்கொண்டு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்ப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.