திமுக – காங்கிரஸ் : தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்தி!

 

திமுக – காங்கிரஸ் : தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்தி!

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடருமென தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸின் மூத்த தலைவரான உம்மன் சாண்டி நேற்று சென்னை வந்தார். திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்பது என்பது குறித்து நேற்றே காங்கிரஸ் ஆலோசனை நடத்தியது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளை திமுகவிடம் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டது.

திமுக – காங்கிரஸ் : தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்தி!

இதைத் தொடர்ந்து, இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – காங்கிரஸ் நிர்வாகிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் திமுக சார்பில் துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்டோரும், காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டி, ரன்தீப் சிங் சுர்ஜிவாலா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் பங்கேற்றார்.

திமுக – காங்கிரஸ் : தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்தி!

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும். அண்ணா அறிவாலயத்தில் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவும் இருந்தது என்று கூறினார். மேலும், தலைமையுடன் கலந்து பேசிய பின்னர் திமுகவுடன் பேச்சுவார்த்தை மீண்டும் நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.