மகாராஷ்டிராவில் எங்க கூட்டணிக்குள் பிரச்சினைகள் இருக்கு….. மீண்டும் புகைச்சலை கிளப்பும் காங்கிரஸ்

 

மகாராஷ்டிராவில் எங்க கூட்டணிக்குள் பிரச்சினைகள் இருக்கு….. மீண்டும் புகைச்சலை கிளப்பும் காங்கிரஸ்

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த கூட்டணியில் உள்ளன. இந்த கூட்டணியில உள்ள காங்கிரஸ் ஆரம்பம் முதலே வேண்டா வெறுப்பாக இருப்பது போல் தோற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. அண்மையில், மகாராஷ்டிரா அரசை ஆதரிக்க மட்டுமே செய்கிறோம். ஆட்சியை நடத்துவதில் முக்கிய பங்காற்றவில்லை. காங்கிரஸ் கட்சி தனது சொந்த அரசாங்கத்தை நடத்தும் இடத்தில் சிறப்பாக செயல்படுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். இது மகா விகாஸ் கூட்டணிக்குள் விரிசல் உள்ளதை வெளிப்படுத்தியது.

மகாராஷ்டிராவில் எங்க கூட்டணிக்குள் பிரச்சினைகள் இருக்கு….. மீண்டும் புகைச்சலை கிளப்பும் காங்கிரஸ்

மேலும், சிவ சேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே அடிக்கடி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸ் தலைவர்களை அவர் சந்தித்து பேசவில்லை. இது நாம் கூட்டணியில் இல்லை என்ற உணர்வே காங்கிரஸ் கொடுத்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், அம்மாநில பொது பணித்துறை அமைச்சருமான அசோக் சவான் பேட்டி ஒன்றில், பிரச்சினைகள் உள்ளன (மகா விகாஸ் அகாதி கூட்டணிக்குள்). எங்களது பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க முதல்வரை சந்திக்க முயற்சி செய்கிறோம். அடுத்த 2 நாட்களுக்குள் அவரை சந்திப்போம் என தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் எங்க கூட்டணிக்குள் பிரச்சினைகள் இருக்கு….. மீண்டும் புகைச்சலை கிளப்பும் காங்கிரஸ்

காங்கிரஸ் வட்டாரங்கள் இது குறித்து கூறுகையில், சில பிரச்சினைகள் குறித்து கட்சிக்குள் அதிருப்தி உள்ளது, உத்தவ் தாக்கரேவுடன் விவாதித்து அவற்றை தீர்க்க கட்சி விரும்புகிறது அதைத்தான் காங்கிரஸ் அமைச்சர் மேற்கோள் காட்டியுள்ளார். மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் மற்றும் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான் நாளை முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் உத்தவ் தாக்கரே ஆளும் கூட்டணி வலுவாக உள்ளது என அடிக்கடி கூறி வந்தாலும் உண்மையில் கூட்டணி இடியாப்ப சிக்கலில் இருப்பதை காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.