இந்தியா-சீனா எல்லை பிரச்சினை தொடர்பாக விவாதிக்க மோடி பயப்படுகிறார்… காங்கிரஸ் குற்றச்சாட்டு

 

இந்தியா-சீனா எல்லை பிரச்சினை தொடர்பாக விவாதிக்க மோடி பயப்படுகிறார்… காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சினை தொடர்பாக விவாதிக்க மோடி பயப்படுகிறார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா-சீனா எல்லை பிரச்சினை குறித்து உரையாற்றினார். எல்லையை சீனா ஒப்புக்கொள்ள மறுப்பதால் எல்லை பதற்றம் தொடர்ந்து தீர்க்கப்படாமல் உள்ளது. மேலும் எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ராஜ்நாத் சிங் உரையாற்றிய பிறகு, காங்கிரஸ் எம்.பி.க்கள் உண்மையான எல்லை கட்டுப்பாடு நிலைமை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தியா-சீனா எல்லை பிரச்சினை தொடர்பாக விவாதிக்க மோடி பயப்படுகிறார்… காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ்

ஆனால் அதற்கு அரசாங்கம் மறுத்ததால் மக்களவையிலிருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: லடாக்கில் இந்தியா-சீனா நிலைமை குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது அறிக்கையை முன்வைத்தார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை நாடு மிக முக்கியமானது.

இந்தியா-சீனா எல்லை பிரச்சினை தொடர்பாக விவாதிக்க மோடி பயப்படுகிறார்… காங்கிரஸ் குற்றச்சாட்டு
ராஜ்நாத் சிங்

1962ல் இந்தியா-சீனா போர் நடந்த போது, எதிர்கட்சி தலைவர் வாஜ்பாய் எல்லை நிலவரம் குறித்து கேள்வி கேட்டார். அதை பிரதமர் நேரு ஏற்றுக்கொண்டார், அதனையடுத்து போர் மற்றும் எல்லை நிலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் விவாதம் நடந்தது. இந்த அரசு எங்களை பேச அனுமதிக்க மறுக்கிறது. காங்கிரஸ் ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டுமே என அவர்கள் பயப்படுகின்றனர். இந்தியா-சீனா நிலைமை குறித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது பிரதமர் மோடி இல்லை. நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடத்துவதற்கு அவர் அஞ்சுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.