வரும் நாட்களில் பீகாரில் மக்கள் அதிகளவில் இறப்பார்கள்…. எச்சரிக்கும் காங்கிரஸ் எம்.பி. அகிலேஷ் பிரசாத் சிங்

வரும் நாட்களில் பீகாரில் மக்கள் அதிகளவில் இறப்பார்கள்…. எச்சரிக்கும் காங்கிரஸ் எம்.பி. அகிலேஷ் பிரசாத் சிங்

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் அகிலேஷ் பிரசாத் சிங். அவர் நேற்று முன்னணி செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிராக போராட பீகார் அரசு ஒன்றும் செய்யவில்லை. பீகார் மக்கள் கடவுனை நம்பிதான் உள்ளனர் என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன். உங்களிடம் சொல்கிறேன் வரும் நாட்களில் பீகாரில் அதிகளவில் மக்கள் இறப்பார்கள்.

வரும் நாட்களில் பீகாரில் மக்கள் அதிகளவில் இறப்பார்கள்…. எச்சரிக்கும் காங்கிரஸ் எம்.பி. அகிலேஷ் பிரசாத் சிங்

பீகாரில் தொற்று பரவுகிறது என்றாலும், பரிசோதனைகள் குறைவாகவே நடைபெறுகிறது. பீகாரில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பீகாரில் கோவிட் பரிசோதனைகள் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே நடைபெறுகிறது. நிதிஷ் குமார் எதையும் செய்யவிரும்பவில்லை. அவர் எப்படியாவது பதவியில் இருக்க விரும்புகிறார். அதற்கும் பொது சேவைக்கும் சம்பந்தம் இல்லை.

வரும் நாட்களில் பீகாரில் மக்கள் அதிகளவில் இறப்பார்கள்…. எச்சரிக்கும் காங்கிரஸ் எம்.பி. அகிலேஷ் பிரசாத் சிங்

நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சுகாதார அமைச்சராக இருந்தேன். அங்குள்ள சுகாதார கட்டமைப்பை நான் அறிவேன். சுகாதார வசதிகள் மாநிலத்தில் மிக மோசமானவை. பீகாரில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களை நம்பிக்கை குலைக்க விரும்பவில்லை. இருப்பினும் பாட்னாவுக்கு வெளியே, பி.எம்.சி.எச்., என்.எம்.சி.எச். மற்றும் எய்ம்ஸ் பாட்னா ஆகியவற்றை தவிர்த்து மற்ற இடங்களில் முறையான சிகிச்சை வசதி கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பீகாரில் கோவிட்-19 களநிலவரத்தை மதிப்பீடு செய்வதற்காக மத்திய சுகாதார அமைச்சகத்தின் 3 பேர் கொண்ட குழு நேற்று பீகார் வந்தது குறிப்பிடத்தக்கது.