மோடி, அமித்ஷா கால்களில் முதல்வர் பழனிசாமி விழுவதா? ராகுல் காந்தி

 

மோடி, அமித்ஷா கால்களில் முதல்வர் பழனிசாமி விழுவதா? ராகுல் காந்தி

எனக்கு கீழ் கும்பிடு போட்டு நில் என்பதை பாஜகவின் சித்தாந்தம் என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தலுக்கு ஒருவாரமே உள்ள நிலையில் பிரதான கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளுடன் களம் காணும் நிலையில் இன்று ராகுல் காந்தி சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பரப்புரைக்காக ராகுல் காந்தி காலை 11 மணிக்கு சென்னை வந்தடைந்த ராகுலை விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் ஆகியோர் வரவேற்றனர்.

மோடி, அமித்ஷா கால்களில் முதல்வர் பழனிசாமி விழுவதா? ராகுல் காந்தி

இந்நிலையில் சென்னை அடையாறில் பரப்புரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “தமிழகம், தமிழகத்தில் இருந்து ஆளப்படும் ஆட்சிமுறையை விரும்புகிறேன். அனைத்து மொழிகளுக்கும் மரியாதை என்பதே இந்தியாவின் மையமாக இருக்கவேண்டும். தமிழக மக்கள் அனைவரும் எனக்கு சகோதர சகோதரிகள் . அனைத்து மொழிகளின் பெருமையும் சேர்ந்ததுதான் இந்தியா. டெல்லியில் இருந்து ஆட்சி செய்யாமல் தமிழகத்தில் இருந்து ஆட்சி முறை செய்ய வேண்டும். எனக்கு கீழ் கும்பிடு போட்டு நில் என்பதை பாஜகவின் சித்தாந்தம்; அனைவரையும் அரவணைப்பது என்பது காங்கிரசின் சித்தாந்தம். பாஜகவுக்கு யார் சென்றாலும் அக்கட்சி தலைவர்களின் காலை தொட்டு வணங்க வேண்டும்; சம மதிப்பு தராத எந்த உறவும் பயனற்ற உறவாகும் .அனைவரையும் அடிபணிய வைப்பது ஆர்.எஸ்.எஸ். பாஜக, மோடியின் சித்தாந்தம்” என்றார்.

மோடி, அமித்ஷா கால்களில் முதல்வர் பழனிசாமி விழுவதா? ராகுல் காந்தி

வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மெளலானாவை ஆதரித்து பரப்புரை மேற் கொண்டு வரும் ராகுல் காந்தி மதியம் 3 மணிக்கு சேலம் செல்கிறார். அங்கு நடக்கவுள்ள பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் பங்கேற்கிறார்.