செல்போன்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்; ஆளுநர் மாளிகைகளை காங்கிரஸார் முற்றுகை!

செல்போன்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்; ஆளுநர் மாளிகைகளை காங்கிரஸார் முற்றுகை!

பெகாசஸ் மென்பொருள் மூலம் தலைவர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது.

பெகாசஸ் மென்பொருள் மூலமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், இதன் பின்னணியில் இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிவிலக வேண்டுமென வலியுறுத்தியது. மேலும், ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெறுமென அறிவித்தது.

செல்போன்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்; ஆளுநர் மாளிகைகளை காங்கிரஸார் முற்றுகை!

இந்த நிலையில், ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவை இஸ்ரேல் உளவு பார்த்ததாக உள்துறை அமைச்சர் அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 1000க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி வருகின்றனர்.

செல்போன்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்; ஆளுநர் மாளிகைகளை காங்கிரஸார் முற்றுகை!

புதுச்சேரியில் காமராஜர் சிலையில் இருந்து பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையின் முன் காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே போல, பெங்களூரிலும் சித்தராமையா உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்கின்றனர்.