வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு! வரும் 24 ஆம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

 

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு! வரும் 24 ஆம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளை நிலத்தை விட்டும் வேளாண் தொழிலை விட்டும் அப்புறப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களை ஆதரிக்கும் விதமாக உள்ளது. உடனடியாக இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சார்ந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதாவை தாக்கல் செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு! வரும் 24 ஆம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து செப். 24 முதல் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. முன்னதாக அதே தினத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை திருச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதேபோல் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28 ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது குறிப்பிடதக்கது.