மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி திடீர் அமெரிக்க பயணம்… ராகுல் காந்தியும் சென்றதால் பரபரப்பு

மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி திடீர்  அமெரிக்க பயணம்… ராகுல் காந்தியும் சென்றதால் பரபரப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக நேற்று காலையில் அமெரிக்காவுக்கு கிளம்பி சென்றார். அவருடன் ராகுல் காந்தியும் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு கிளம்பி சென்றார். மேலும் தனது மகன் ராகுல் காந்தியையும் அவர் அழைத்து சென்றததால் அவரது அமெரிக்க பயணம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது.

மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி திடீர்  அமெரிக்க பயணம்… ராகுல் காந்தியும் சென்றதால் பரபரப்பு
சோனியா, ராகுல் காந்தி

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் சோனியா காந்தி 2 வாரங்களுக்கு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் ராகுல் காந்தி ஒரு வாரத்தில் இந்தியா திரும்பி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி திடீர்  அமெரிக்க பயணம்… ராகுல் காந்தியும் சென்றதால் பரபரப்பு
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

சோனியா காந்தி அமெரிக்க பயணம் தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டிவிட்டரில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழக்கான பின்தொடர்தல் மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். தொற்றுநோய் பரவல் காரணமாக வழக்கமான பரிசோதனை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அவருடன் ராகுல் காந்தியும் சென்றுள்ளார். அவர்களின் அக்கறை மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்துகிறோம் என பதிவு செய்து இருந்தார்.