அமெரிக்காவிலிருந்து டெல்லி திரும்பிய சோனியா, ராகுல் காந்தி… கூட்டத்தொடரில் பங்கேற்பார்கள் என தகவல்

அமெரிக்காவிலிருந்து டெல்லி திரும்பிய சோனியா, ராகுல் காந்தி… கூட்டத்தொடரில் பங்கேற்பார்கள் என தகவல்

அமெரிக்காவில் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் முடிவடைந்ததையடுத்து சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் நேற்று டெல்லி வந்தடைந்தார்.

கடந்த 12ம் தேதியன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு கிளம்பி சென்றார். அவருடன் ராகுல் காந்தியும் சென்றார். ராகுல் காந்தி மட்டும் முதலில் ஒரு வாரத்தில் திரும்பி வந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பார் என கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மழைக்கால கூட்டத்தொடர் அமர்வு குறைக்கப்பட்டும் என தகவல் வெளியானது.

அமெரிக்காவிலிருந்து டெல்லி திரும்பிய சோனியா, ராகுல் காந்தி… கூட்டத்தொடரில் பங்கேற்பார்கள் என தகவல்
சோனியா, ராகுல் காந்தி

இதனால் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் சோனியா காந்திக்கு வழக்கமான பரிசோதனைகள் முடிந்ததையடுத்து நேற்று காலையில் அவர்கள் இருவரும் நேற்று டெல்லி வந்தனர். அவர்கள் இருவரும் நேற்று காலை 7 மணிக்கு டெல்லி வந்தடைந்ததாக ராகுல் காந்தி உதவியாளர் தெரிவித்தார். மழைக்கால கூட்டத்தொடர் இன்று முடிவடையும் என எதிர்பார்க்க்பபடுகிறது. இருப்பனும் அவர்கள் இன்றைய அமர்வில் அவர்கள் இருவரும் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து டெல்லி திரும்பிய சோனியா, ராகுல் காந்தி… கூட்டத்தொடரில் பங்கேற்பார்கள் என தகவல்
ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மத்திய அரசுடன் எதிர்க்கட்சிகள் கடும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ளனர். இதனால் இன்று நாடாளுமன்றத்தில் பரபரப்பான விவாதத்துக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.