ஈரோட்டில் 41 ஆண்டுகளுக்கு பின் வாகை சூடிய காங்கிரஸ்… தொண்டர்கள் உற்சாகம்!

 

ஈரோட்டில் 41 ஆண்டுகளுக்கு பின் வாகை சூடிய காங்கிரஸ்… தொண்டர்கள் உற்சாகம்!

ஈரோடு

ஈரோட்டில் 41 வருடங்களுக்குப் பிறகு தேர்தலில் நேரடியாக களமிறங்கிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது, தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன், திருமகன் ஈ.வெ.ரா போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜ் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில், சுமார் 41 வருடங்களுக்கு பின் ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் நேரடியாக கை சின்னத்தில் களமிறங்கியது. கடைசியாக கடந்த 1980 ஆம் ஆண்டு காங்கிரஸ், ஈரோடு தொகுதியில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சாயிநாதன் கை சின்னத்தில் போட்டியிட்டு, 500-க்கும் கீழ் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

ஈரோட்டில் 41 ஆண்டுகளுக்கு பின் வாகை சூடிய காங்கிரஸ்… தொண்டர்கள் உற்சாகம்!

அதன் பிறகு, 41 வருடங்களுக்குப் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் நேரடியாக காங்கிரஸ் கட்சி களமிறங்கியது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா மொத்தம் 65 ஆயிரத்து 472 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து, போட்டியிட்ட தமாகா இளைஞர் அணி தலைவர் யுவராஜா 57 ஆயிரத்து 391 வாக்குகள் பெற்றார்.

இதனால், திருமகன் ஈவெரா 8 ஆயிரத்து 81 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 41 வருடங்களுக்குப் பிறகு, போட்டியிட்டு காங்கிரஸ் வெற்றி பெற்றதால், காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.