ஈரோட்டில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் அமைக்க, காங்கிரஸ் கோரிக்கை!

 

ஈரோட்டில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் அமைக்க, காங்கிரஸ் கோரிக்கை!

ஈரோடு

ஈரோட்டில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையகம் அமைக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி.ராஜன் நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து, ஈரோடு மாவட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் அமைக்க, காங்கிரஸ் கோரிக்கை!

தனியார் மருத்துவமனைகள் இந்த மருந்தினை நோயாளிகளுக்கு செலுத்த வேண்டும் என கூறுவதால், இந்த மருந்து மருந்தகங்களில் கிடைப்பதில்லை என்றும், இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கொரோனா பாதித்து மருத்துவ சிகிச்கைக்கு வழியின்றி பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செயல்படுவது போல் ஈரோட்டிலும் அரசு சார்பில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் உடனே திறக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அலுவலகத்தில் ஆட்சியர் இல்லாததால், மனுவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பெற்றுகொண்டார்.