வேளாண் சட்டங்களை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

வேளாண் சட்டங்களை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தர்மபுரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சிற்றரசு தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வேளாண் சட்டங்களை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அப்போது, விவசாயிகளுக்கு எதிரான இந்த வேளாண் சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக, பாமக கட்சிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கையொப்ப பட்டியல், கட்சி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.

வேளாண் சட்டங்களை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்