புதிய வேளாண் சட்டங்களை குப்பை தொட்டியில் வீசுவோம் : ராகுல் காந்தி ஆவேசம்!

 

புதிய வேளாண் சட்டங்களை  குப்பை தொட்டியில் வீசுவோம் : ராகுல் காந்தி ஆவேசம்!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 3 வேளாண் சட்டங்களை குப்பைத்தொட்டியில் வீசுவோம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை  குப்பை தொட்டியில் வீசுவோம் : ராகுல் காந்தி ஆவேசம்!

பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ” புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தால் ஏன் போராட்டம் நடத்துகின்றனர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா சூழலில் வேளாண் மசோதாக்களை சட்டமாக்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் விவசாயிகள் நலனுக்காக என்றால் வேளாண் மசோதாக்கள் மீது ஏன் முழுமையாக விவாதம் நடத்தவில்லை என்றும் ராகுல் காந்தி கேட்டுள்ளார். மேலும் ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பதால் அங்கு மட்டும் தான் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.