“தோத்தாலும் புத்தி வர மாட்டிக்கிது” – காங்கிரஸை காய்ச்சி எடுத்த பிரதமர் மோடி!

“தோத்தாலும் புத்தி வர மாட்டிக்கிது” – காங்கிரஸை காய்ச்சி எடுத்த பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பாஜக ஆட்சியில் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள காங்கிரஸுக்கு மனமில்லை. அவர்கள் இன்னும் அந்த கோமாவிலிருந்து வெளிவரவில்லை. இருப்பினும் நாம் இதுவரை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு கடந்து வந்துவிட்டோம்.

“தோத்தாலும் புத்தி வர மாட்டிக்கிது” – காங்கிரஸை காய்ச்சி எடுத்த பிரதமர் மோடி!

காங்கிரஸ் கட்சியின் இம்மாதிரியான நடத்தை துரதிருஷ்டவசமானது. கொரோனாவுக்கு எதிராக நாம் இவ்வளவு தூரம் மக்களைக் காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறோம். நாட்டில் தடுப்பூசிக்கு பஞ்சம் இல்லை. இந்த உண்மைகளை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. பாஜக ஆளாத டெல்லியில் கூட 20 சதவீத முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடவில்லை. ஆனால் அதையெல்லாம் இவர்கள் பேசுவதில்லை. மிகவும் பொறுப்பற்ற தன்மையுடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

“தோத்தாலும் புத்தி வர மாட்டிக்கிது” – காங்கிரஸை காய்ச்சி எடுத்த பிரதமர் மோடி!

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களை திசை திருப்புகின்றன. அவர்கள் ஒரு நெகட்டிவான சூழலை உருவாக்க முயற்சிக்கிறார்கள். காங்கிரஸ் தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று நினைக்கிறது. ஆனால் உண்மையில் நாடு முழுவதும் அதன் அதிகாரங்கள் சரிந்து கொண்டிருக்கின்றன. அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் தோல்வியுற்றிருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பாஜகவை பற்றியே அது அதிகமாக கவலைப்படுகிறது” என்றார்.