பினராயி விஜயன் அரசு தோல்வியை ஒப்புக்கொண்டு, கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்… காங்கிரஸ்

 

பினராயி விஜயன் அரசு தோல்வியை ஒப்புக்கொண்டு, கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்… காங்கிரஸ்

கேரளாவில் கோவிட் நெருக்கடியை மாநில அரசால் திறம்பட சமாளிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மக்களிடம் மன்னிப்பு என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு கோவிட் நெருக்கடியை திறம்பட கையாளவில்லை என்று அம்மாநில காங்கிரஸ் எம்.பி. பென்னி பெஹனன் மற்றும் ஹிபி ஈடன் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். பென்னி பெஹனன் கூறியதாவது: கேரளாவில் கோவிட் நெருக்கடியை மாநில அரசால் திறம்பட சமாளிக்க முடியவில்லை. பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தோல்வியை ஒப்புக்கொண்டு, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் பிரச்சாரத்துக்கான ஒரு மறைப்பாக கோவிட் 19ஐ பயன்படுத்தி கொண்டது. மக்களையும், ஊடகங்களையும் தவறாக வழிநடத்தி பல விருதுகளை அரசு வென்றுள்ளது.

பினராயி விஜயன் அரசு தோல்வியை ஒப்புக்கொண்டு, கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்… காங்கிரஸ்
காங்கிரஸ்

சுகாதார துறை அமைச்சர் கே.கே. சைலஜா விருதுகளை திரும்ப அளிக்க வேண்டும் மற்றும் மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலமாக கேரளாவை உருவாக்கியதற்கு அவர்கள்தான் பொறுப்பு. கோவிட் சோதனைகளிலும் மாநில அரசு மோசடி செய்துள்ளது. புதிய கேரளாவை உருவாக்குவதாக அறிவித்த முதல்வர், புதிய கொரோனா கேரளாவை உருவாக்கியுள்ளார். நோயின் மூலத்தையும், காரணத்தையும் கண்டறிய ஒரு கண்காணிப்பு சோதனை நடத்த அரசாங்கம் தயாராக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பினராயி விஜயன் அரசு தோல்வியை ஒப்புக்கொண்டு, கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்… காங்கிரஸ்
பென்னி பெஹனன்

ஹிபி ஈடன் கூறுகையில், கோவிட் சிகிச்சைக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் வரிசை சிகிச்சை மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இது முக்கியமான பின்னடைவு. கோவிட் சிகிச்சை இலவசம் இன்று அரசு சொன்னாலும், எர்ணாகுளம் பி.வி.எஸ். மருத்துவமனை ஆன்டி வைரல் தடுப்பூசிக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறது. விதிவிலக்கு அளிப்பதில் சுகாதாரத்துறை மிகப்பெரிய தவறு செய்துள்ளது. கோவிட் சிகிச்சை மையங்களுக்கு மாநில அரசு போதுமான நிதி வழங்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். கேரளாவில் தற்போது 72,482 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.