பஞ்சாப் காங்கிரசில் எந்த பிரச்சினையும் இல்லை… சிலருக்கு உள்நோக்கம் உள்ளது.. சித்துவை சாடிய மனிஷ் திவாரி

 

பஞ்சாப் காங்கிரசில் எந்த பிரச்சினையும் இல்லை… சிலருக்கு உள்நோக்கம் உள்ளது.. சித்துவை சாடிய மனிஷ் திவாரி

பஞ்சாப் காங்கிரசில் எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் சிலருக்கு உள்நோக்கம் உள்ளது என்று நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மனிஷ் திவாரி மறைமுகமாக சாடினார்.

பஞ்சாபில் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் தற்போது தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. நவ்ஜோத் சிங் சித்து அடிக்கடி முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் அவரது நிர்வாகம் தொடர்பாக அடிக்கடி விமர்சனம் செய்து வருகிறார். அமரீந்தர் சிங் மற்றும் சித்துவுக்கு இடையிலான மோதலால் பஞ்சாப் காங்கிரஸ் அல்லோகப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் அமரீந்தர் சிங்குக்கு ஆதரவாக மனிஷ் திவாரி குரல் கொடுத்துள்ளார்.

பஞ்சாப் காங்கிரசில் எந்த பிரச்சினையும் இல்லை… சிலருக்கு உள்நோக்கம் உள்ளது.. சித்துவை சாடிய மனிஷ் திவாரி
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மாநிலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. மத்திய அரசின் மாற்றாந்தாய் செயல்பாடு காரணமாக சில சிக்கல்கள் உள்ளன. இருப்பினும், யாராவது (நவ்ஜோத் சிங் சித்து) தனது தனிப்பட்ட திட்டத்தை டிவிட்டர் அல்லது வேறு எந்த ஊடகம் வாயிலாக எடுக்க விரும்பினால், அகில் இந்திய காங்கிரஸ் தலைவர்கள் அதனை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பஞ்சாப் காங்கிரசில் எந்த பிரச்சினையும் இல்லை… சிலருக்கு உள்நோக்கம் உள்ளது.. சித்துவை சாடிய மனிஷ் திவாரி
நவ்ஜோத் சிங் சித்து

பஞ்சாப் ஒரு மாநிலமாக நடைமுறைக்கு வந்த 1966 முதல் 2017 வரை, பஞ்சாப் சட்டப்பேரவையின் 117 இடங்களில் இதுவரை காங்கிரசை தவிர எந்தவொரு கட்சியும் 77 இடங்களை கைப்பற்றியது இல்லை. காங்கிரஸ் 3 இடைத்தேர்தல்களிலும், 13 மக்களவை தொகுதிகளில் 8ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 90 சதவீதத்துகமகு அதிகமான உள்ளாட்சி இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. நீங்கள் யாரை பிரச்சாரத்துக்கு அழைத்தீர்கள் என்று எந்தவொரு எம்.பி.யையும் கேளுங்கள், அவர்கள் கேப்டன் பெயரை சொல்வார்கள். பஞ்சாப் அரசு சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் சிலருக்கு மட்டுமே உள்நோக்கங்கள் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.