எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

 

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே என்று குற்றம் சாட்டினார்.

மல்லிகார்ஜூன் கார்கே நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது: பெகாசஸ், விவசாயிகளின் போராட்டம், கோவிட்-19 மேலாண்மை அல்லது விலைவாசி உயர்வு எதுவாக இருந்தாலும், பொதுமக்களை பாதிக்கும் பிரச்சினைகளை குறித்து எதிர்க்கட்சிகள் தங்களது தெரிவிக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை. நாம் உயிருடன் இருந்தால்தான் நாம் மற்ற விஷயங்களை பற்றி பேச முடியும். நம்மிடம் குரல் இருந்தால், நாம் மற்றவர்களுக்காக பேசலாம். எங்களிடம் குரல் இல்லை என்றால், விவசாயி பிரச்சினை இருக்காது, பணவீக்கம் இல்லை, விலை உயர்வு இருக்காது, கோவிட் இருக்காது.

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே
பெகாசஸ் சாப்ட்வேர்

பேசுகிறவருக்கு அதிகாரம் இருக்க வேண்டும். இது முக்கியமானது, ஏனென்றால் இது எனது அடிப்படை உரிமை, இது எனது தனியுரிமை, அது எனது பாதுகாப்பு. பெகாசஸ் சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான என்.எஸ்.ஒ. என்பது இஸ்ரேல் நிறுவனம் ஆனால் இங்கு என் என்பது நரேந்திர (நரேந்திர மோடி) எஸ் என்பது ஷா (அமித் ஷா) ஓ என்றால் ஒட்டுமொத்த கண்காணிப்பு. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொடர்புடைய பிரச்சினைகளை எழுப்புவது எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் இருந்தது. காங்கிரஸ் மட்டுமல்ல 15 எதிர்க்கட்சி தலைவர்களும் ஒன்றாக இணைந்து முதலில் எழுப்பப்பட வேண்டிய பிரச்சினை நமது சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும், அடிப்படை உரிமைகளை காப்பாற்ற வேண்டும், கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்தரத்தை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர்.

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே
மோடி, அமித் ஷா

நாங்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) குறைந்தது 16 நாட்களை வீணாக்கினோம். சபாநாயகர் விவாதத்துக்கு நேரம் ஒதுக்கி இருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. அவை சுமூகமாக நடந்து இருக்கும். பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் ஏன் சபைக்கு வந்து விளக்கம் அளிக்க கூடாது? இது உள்பாதுகாப்பு பிரச்சினை அவர்களின் (பிரதமர், உள்துறை துறை அமைச்சர்) பொறுப்பு. இது அவர்களை பொறுத்தது. ஐ.டி அல்லது வேறு சில அமைச்சர்களுக்கானது அல்ல. ஒவ்வொரு நாளும் 30-40 உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்தால், அனைவரும் கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது. தலைவர் ஏன் அனுமதிக்கவில்லை என்று நான் அவைக்கு வெளியே கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இது அரசின் தவறு. அரசு அழுத்தம் கொடுக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.