பா.ஜ.க. தடுப்பூசி என்று சொல்வது விஞ்ஞானிகளை அவமதிப்பதாகும்.. சமாஜ்வாடியை சாடிய காங்கிரஸ்

 

பா.ஜ.க. தடுப்பூசி என்று சொல்வது விஞ்ஞானிகளை அவமதிப்பதாகும்.. சமாஜ்வாடியை சாடிய காங்கிரஸ்

கோவிட்-19 தடுப்பூசியை பா.ஜ.க. தடுப்பூசி என்று சொல்வது விஞ்ஞானிகளை அவமதிப்பதாகும் என்று சமாஜ்வாடியை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

இந்தியாவில் அவசர காலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஆக, கோவிட்-19 தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பா.ஜ.க அரசின் தடுப்பூசியை என்னால் எப்படி நம்ப முடியும். வாய்ப்பே இல்லை?. எனது அரசு ஆட்சி அமைக்கும்போது எல்லோரும் இலவசமாக தடுப்பூசியை பெறுவார்கள். நாங்கள் பா.ஜ.க. அரசின் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார்.

பா.ஜ.க. தடுப்பூசி என்று சொல்வது விஞ்ஞானிகளை அவமதிப்பதாகும்.. சமாஜ்வாடியை சாடிய காங்கிரஸ்
அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாடியின் அசுதோஷ் சின்ஹா கூறுகையில், தடுப்பூசி போட்டு கொண்டால் ஒரு நபரை ஆண்மையற்றவராக மாற்றி விடக்கூடும் என்ற தெரிவித்தார். கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான சமாஜ்வாடி தலைவர்களின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் அகிலேஷ் பிரசாத் சிங் இது தொடர்பாக கூறியதாவது: கோவிட்-19 தடுப்பூசியை பா.ஜ.க. தடுப்பூசி என்று சொல்வது விஞ்ஞானிகளை அவமானப்படுத்துவதாகும். விஞ்ஞானிகள் இந்த தடுப்பூசியை நாட்டுக்காக உருவாக்குகினார்கள்.

பா.ஜ.க. தடுப்பூசி என்று சொல்வது விஞ்ஞானிகளை அவமதிப்பதாகும்.. சமாஜ்வாடியை சாடிய காங்கிரஸ்
அகிலேஷ் பிரசாத் சிங்

அரசின்கீழ் பணியாற்றுவர்கள் விஞ்ஞானிகள். அவர்கள் உண்மையில் நாட்டுக்காக பணியாற்றுகிறார்கள். அரசு தடுப்பூசியை உருவாக்கவில்லை. பிரதமர் மற்றும் அவரது அமைச்சர்களும் அதனை உருவாக்கவில்லை. இதை ஆராய்ச்சி அடிப்படையில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. வரவேற்க வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பூசி மக்களை ஆண்மையற்றவராக மாற்றும் என்ற அறிக்கைகளுக்க பதில் அளிப்பது சரியல்லை. இது முட்டாள்தனம் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.