மத்திய பிரதேசத்தில் வெற்று ஆக்சிஜன் சிலிண்டருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

 

மத்திய பிரதேசத்தில் வெற்று ஆக்சிஜன் சிலிண்டருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

மத்திய பிரதேசத்தில் சுகாதார சேவைகளின் நிலைமை மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டியதுடன், அதனை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெற்று ஆக்சிஜன் சிலிண்டருடன் போராட்டம் நடத்தினர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2வது அலை மிகவும் தீவிரமாக உள்ளது. மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று முன்தினம் மட்டும் புதிதாக சுமார் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இந்த சூழ்நிலையில், அம்மாநிலத்தில் சுகாதார சேவைகள் மோசமாக இருப்பதாக கூறி அதனை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெற்று ஆக்சிஜன் சிலிண்டருடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மத்திய பிரதேசத்தில் வெற்று ஆக்சிஜன் சிலிண்டருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
காங்கிரஸ்

பி.சி. சர்மா, ஜீது பட்வாரி மற்றும் குணால் சவுத்ரி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெற்று ஆக்சிஜன் சிலிண்டருடன் போபால்ஸ் மிண்டோ ஹாலுக்கு (மத்திய பிரதேசத்தின் பழைய சட்டப்பேரவை கட்டிடம்) வந்தனர். அங்கு உள்ள காந்தி சிலைக்கு முன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெமடிசிவிர் மருந்து உள்பட நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை வழங்குவதில் பா.ஜ.க. அரசு செயலற்று உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

மத்திய பிரதேசத்தில் வெற்று ஆக்சிஜன் சிலிண்டருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
பிரதமர் மோடி

போராட்டத்துக்கு பின்னர் ஜீது பட்வாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஒராண்டாக சுயசார்ப்பு தொடர்பாக பெரிய கூற்றுக்களை முன்வைத்தார். இது இப்போது வெளிப்பட்டுள்ளது. ஆக்சிஜன், தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் கிடைக்காததால் பலர் இறந்து வருகின்றனர். முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் பொய் பேசுகிறார். சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இல்லாததால் மாநிலத்தில் கோவிட்-19 நிலை மோசமடைந்து வருகிறது. மத்திய பிரதேசத்தின் நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.