500 ரூபாய் சானிடைசரை ரூ.900 கொடுத்து வாங்கியிருக்கு எடியூரப்பா அரசு… காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு..

500 ரூபாய் சானிடைசரை ரூ.900 கொடுத்து வாங்கியிருக்கு எடியூரப்பா அரசு… காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு..

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொற்றுநோயை பரவுவதை கட்டுப்படுத்த மற்றும் கண்டறிய சானிடைசர், தெர்மல் மீட்டர் உள்பட பல்வேறு கொரோனா வைரஸ் கருவிகளை கர்நாடக அரசு கொள்முதல் செய்து வருகிறது. கர்நாடக அரசு கொரோனா வைரஸ் கருவிகளை கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

500 ரூபாய் சானிடைசரை ரூ.900 கொடுத்து வாங்கியிருக்கு எடியூரப்பா அரசு… காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு..

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான யூ.டி. காதர் இது தொடர்பாக கூறியதாவது: 500 ரூபாய் சானிடைசரை ரூ.900க்கும், ரூ.1,200 மதிப்பிலான தெர்மல் மீட்டரை 9000 ரூபாய் கொடுத்து அரசு வாங்கியுள்ளது. வேலை செய்ய அனுமதிக்குமாறு கேட்பதற்கு பதிலாக மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பதால் பி.ஸ்ரீராமுலு மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.

500 ரூபாய் சானிடைசரை ரூ.900 கொடுத்து வாங்கியிருக்கு எடியூரப்பா அரசு… காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு..

தொற்றுநோய் பரவ தொடங்கி 3 மாதங்கள் தாண்டி விட்டது ஆனால் தேவையான நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் அனுப்புவதில் அரசு இன்னும் போராடுகிறது. தேவையான மக்களுக்கு ஆம்புலன்ஸ் அனுப்புவதற்கு பதிலாக இறுதி சடங்கு வாகனத்தை அரசு அனுப்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.