முதல்வரின் அரசியல் ஆலோசகர் என்னை மிரட்டுகிறார்.. பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு

முதல்வரின் அரசியல் ஆலோசகர் என்னை மிரட்டுகிறார்.. பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் அரசியல் ஆலோசகர் தன்னை மிரட்டியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் உட்கட்சி பூசலுக்கு பஞ்சாப் மாநிலம் தப்பவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ. நவ்ஜோத் சிங் சித்து சமீபகாலமாக முதல்வர் அமரீந்தர் சிங்கை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தற்போது சித்துவுக்கு நெருக்கமானவர் என கருதப்படும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பர்கத் சிங் தற்போது முதல்வரின் அரசியல் ஆலோசகர் தன்னை மிரட்டியதாக பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

முதல்வரின் அரசியல் ஆலோசகர் என்னை மிரட்டுகிறார்.. பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு
பர்கத் சிங்

இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரரான காங்கிரஸ் எம்.எல்.ஏ. பர்கத் சிங் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் அரசியல் ஆலோசகர் சந்தீப் சந்து எனக்கு கடந்த வியாழக்கிழமை இரவு போனில் தொடர்பு கொண்டு, எனக்கு எதிராக ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் நடவடிக்கைகளை எதிர்க்கொள்ள தயராக இருங்கள் என்று தெரிவித்தார்.

முதல்வரின் அரசியல் ஆலோசகர் என்னை மிரட்டுகிறார்.. பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு
சந்தீப் சந்து

உண்மை பேசுவதற்கும், புனிதங்களுக்கான எதிராக நடைபெறும் சம்பவங்கள் குறித்து எனது குரல் எழுப்புவதற்கும் எந்தவொரு தண்டனையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் பர்கத் சிங் குற்றச்சாட்டை சந்தீப் சந்து மறுத்துள்ளார். தற்போது இந்த விவகாரம் பஞ்சாப் காங்கிரசுக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.