பதவியை ராஜினாமா செய்யும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.. கலங்கும் மத்திய பிரதேச காங்கிரஸ்.. சந்தோஷத்தில் பா.ஜ.க.

பதவியை ராஜினாமா செய்யும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.. கலங்கும் மத்திய பிரதேச காங்கிரஸ்.. சந்தோஷத்தில் பா.ஜ.க.

2020ம் ஆண்டு மத்திய பிரதேச காங்கிரசுக்கு மோசமான ஆண்டாக அமைந்து விட்டது போல் தெரிகிறது. 18 ஆண்டுகளாக கட்சியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா முதல்வர் கமல் நாத்துடன் ஏற்பட்ட மோதலில் காங்கிரசிலிருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்தார். காங்கிரசிலிருந்து போகும் போது தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரையும் பா.ஜ.க.வுக்கு அழைத்து சென்றார். இதனால் முதல்வர் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது.

பதவியை ராஜினாமா செய்யும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.. கலங்கும் மத்திய பிரதேச காங்கிரஸ்.. சந்தோஷத்தில் பா.ஜ.க.

அண்மையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான் லோதி தனது பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் இணைந்தார். அதற்கடுத்த சில நாட்களில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. சுமித்ரா தேவி காஸ்டேகர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் ஐக்கியமானார். இதனால் கதி கலங்கி போய் இருந்த காங்கிரசுக்கு நேற்று மேலும் ஒரு அடி விழுந்தது. மண்டதா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராயன் படேல் நேற்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்வர் சர்மா ஏற்றுக்கொண்டார். படேலும் முந்தையவர்களை போல் பா.ஜ.க.வில் இணைந்தார்.

பதவியை ராஜினாமா செய்யும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.. கலங்கும் மத்திய பிரதேச காங்கிரஸ்.. சந்தோஷத்தில் பா.ஜ.க.

கடந்த 15 தினங்களில் நாராயன் படேலுடன் சேர்த்து மொத்தம் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். நாராயன் படேல் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க. இணைய ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இடைத்தேர்தல் நடத்தவேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.