திறந்தா எல்லா மத வழிப்பாட்டு தலங்களையும் திறக்கணும்… இல்லன்னை எதையும் திறக்க கூடாது…. காங்கிரஸ்

திறந்தா எல்லா மத வழிப்பாட்டு தலங்களையும் திறக்கணும்… இல்லன்னை எதையும் திறக்க கூடாது…. காங்கிரஸ்

கர்நாடகாவில் ஜூன் 1ம் தேதி முதல் கோயில்களை மீண்டும் திறக்க முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு நேற்று முடிவு எடுத்தது. நாட்டில் முதலாவதாக கர்நாடக அரசுதான் கோயில்களை மீண்டும் திறப்பது தொடர்பாக முடிவு எடுத்துள்ளது. ஆனால் கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பெங்களூரூ சாந்திநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.ஏ. ஹரிஸ் கூறியதாவது:

திறந்தா எல்லா மத வழிப்பாட்டு தலங்களையும் திறக்கணும்… இல்லன்னை எதையும் திறக்க கூடாது…. காங்கிரஸ்

மசூதிகள் மற்றும் தேவாலயங்களை மீண்டும் திறப்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். அவை ஒன்றாக மூடப்பட்டன. அவை மீண்டும் திறக்கப்பட வேண்டும். மசூதிகள் அல்லாமல் கோயில்களை மட்டும் திறக்க முடியாது. அவர்களால் (எடியூரப்பா அரசு) இப்போது மதத்தின் பெயரில் அரசியல் செய்ய முடியாது. இது அரசாங்கத்தின் அணுகுமுறை என்றால் மக்கள் அவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திறந்தா எல்லா மத வழிப்பாட்டு தலங்களையும் திறக்கணும்… இல்லன்னை எதையும் திறக்க கூடாது…. காங்கிரஸ்

கர்நாடக அறநிலையத்துறை அமைச்சகத்தின்கீழ், சுமார் 34,500 கோயில்கள் உள்ளன. கர்நாடக அரசின் முடிவின்படி வரும் 1ம் தேதி முதல் அவை அனைத்தும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. கோயில்களை மட்டும் மீண்டும் திறக்கும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், மசூதிகள் மற்றும் தேவாலயங்களையும் திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.