ஏன் இவ்வளவு பேர் வெளியேறுகிறார்கள் என்று காங்கிரஸ் மேலிடம் சிந்திக்க வேண்டும்… அதிருப்தி பெண் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

ஏன் இவ்வளவு பேர் வெளியேறுகிறார்கள் என்று காங்கிரஸ் மேலிடம் சிந்திக்க வேண்டும்… அதிருப்தி பெண் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

ஏன் இவ்வளவு பேர் வெளியேறுகிறார்கள் என்று கட்சியின் மேலிடம் சிந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் அதிருப்தி பெண் எம்.எல்.ஏ. அதிதி சிங் தெரிவித்தார்.

காங்கிரசின் பொதுச்செயலாளராக இருந்த ஜிதின் பிரசாதா நேற்று முன்தினம் பா.ஜ.க.வில் இணைந்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஜிதின் பிரசாதா கட்சியலிருந்து வெளியேறியது தொடர்பாக உத்தர பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. அதிதி சிங் கூறியதாவது: ஜிதின் பிரசாதா காங்கிரசிலிருந்து வெளியேறியது கட்சிக்கு பெரிய இழப்பு. இவர் போன்ற பெரிய தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கான காரணம் என்ன என்பதை கட்சி சிந்திக்க வேண்டும். எங்கோ அது குடும்பத்தின் கட்சியாக மாறி விட்டது. கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

ஏன் இவ்வளவு பேர் வெளியேறுகிறார்கள் என்று காங்கிரஸ் மேலிடம் சிந்திக்க வேண்டும்… அதிருப்தி பெண் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
ஜே.பி. நட்டாவுடன், ஜிதின் பிரசாதா

ஜிதின் பிரசாதா சிறந்த தலைவர். இளம் தலைவராக, இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்றார். அவர் நல்ல படித்த மற்றும் நல்ல நடத்தை கொண்ட தலைவர்.இப்போது அவர் பா.ஜ.க.வில் இணைந்ததால் அவரது எதிர்காலம் பாதுகாப்பானது. இந்த சந்தர்ப்பத்தில் நான் அவரை வாழ்த்த விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு தெரியும். தனது நல்ல மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்துக்காக அவர் பா.ஜ.க.வில் இணைந்தார். காங்கிரஸ் எங்கோ தவறு செய்கிறது அதனால்தான் காங்கிரசின் கடினமான பணியாற்றும் தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறுகின்றனர்.

ஏன் இவ்வளவு பேர் வெளியேறுகிறார்கள் என்று காங்கிரஸ் மேலிடம் சிந்திக்க வேண்டும்… அதிருப்தி பெண் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
காங்கிரஸ்

காங்கிரசில் அதிருப்தி பெருமளவில் அதிகரித்துள்ளது. எனவே அவர்கள் கட்சியை விட்டு வெளியேறி பா.ஜ.க.வுக்கு செல்கிறார்கள். ஏன் இவ்வளவு பேர் வெளியேறுகிறார்கள் என்று கட்சியின் மேலிடம் சிந்திக்க வேண்டும். மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விட்டனர். மாநில மட்டத்திலும் கட்சியை விட்டு வெளியேறும் விஷயத்தில் கட்சி மூளைச்சலவை செய்ய வேண்டிய அவசியம். நான் காங்கிரசிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி, எனது மக்களுக்காக உழைக்கிறேன், அவர்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். வேறு எந்த கட்சியிலும் சேரும் திட்டம் எனக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.